| முத்தி இலம்பகம் | 
1559  | 
 | 
  | 
|  2757 | 
கெடுத லவ்வழி யில்லெனிற் |   |  
|   | 
  கேள்விக டுறைபோய் |   |  
|   | 
வடிகொள் கண்ணியர் மனங்குழைந் |   |  
|   | 
  தநங்கனென் றிரங்கக் |   |  
|   | 
கொடையுங் கோலமுங் குழகுந்தம் |   |  
|   | 
  மழகுங்கண் டேத்த |   |  
|   | 
விடையிற் செல்வுழி விளியினும் |   |  
|   | 
  விளியுமற் றறிநீ. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அவ்வழி கெடுதல் இல் எனின் - அவ்வழிக் கெடுதல் இல்லையெனின்; கேள்விகள் துறைபோய் - நூல்களை முற்றக் கற்று; வடிகொள் கண்ணியர் மனம் குழைந்து - மாவடு வைப்போன்ற கண்ணியர் உள்ளம் குழைந்து; அநங்கன் என்று இரங்க - காமன் என்று உருகி; கொடையும் கோலமும் குழகும் தம் அழகும் கண்டு ஏத்த - கொடை, ஒப்பனை, இளமை, அழகு ஆகியவற்றைக் கண்டு வாழ்த்த; விடையின் செல்வுழி விளியினும் விளியும் - காளைபோல நடக்கும் அக்காலத்தே இறப்பினும் இறக்கும்; நீ அறி - நீ இதனை அறிக. 
 | 
| 
    (வி - ம்.) மற்று : வினைமாற்று. 'பரிசிலர் கொடையை ஏத்த' என்பர் நச்சினார்க்கினியர். 
 | 
| 
    கேள்வி - ஈண்டுக் கல்வி கேள்விகளில் என்பதுபட நின்றது. துறை போதல் - முற்றக்கற்றல். வடி - மாவடு. அநங்கன் - காமன். குழகு - இளமை. விடை - காளை. 
 | 
( 159 ) | 
|  2758 | 
எரிபொன் மேகலை யிலங்கரிச் |   |  
|   | 
  சிலம்பொடு சிலம்பு |   |  
|   | 
மரிபொற் கிண்கிணி யணியிழை |   |  
|   | 
  யரிவையர்ப் புணர்ந்து |   |  
|   | 
தெரிவில் போகத்துக் கூற்றுவன் |   |  
|   | 
  செகுத்திடச் சிதைந்து |   |  
|   | 
முரியும் பல்சன முகம்புடைத் |   |  
|   | 
  தகங்குழைந் தழவே |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) எரிபொன் மேகலை இலங்கு அரிச் சிலம்பொடு சிலம்பும் அரிபொன் கிண்கிணி அணி இழை - ஒளி வீசும் பொன்னாலான மேகலையும், விளங்கும் பரல்களையுடைய சிலம்பும், ஒலிக்கும் அரிகளையுடைய பொன்னாலான கிண்கிணியும், அழகிய அணிகலனும் உடைய; அரிவையர்ப்புணர்ந்து - மங்கையரைக் கூடி; தெரிவு இல் போகத்து - வேறொன்றும் தெரியாத இன்ப 
 |