பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 156 

வனைய மகளிரின் கண்களுக்கு இடமான மார்பிலே தாக்கி வளைந்த அவ்வேலை; மண்இடம் கொண்ட யானை மணி மருப்பிடை இட்டு - நிலமிசை பட்டுவீழ்ந்த யானையின் மணிபொதிந்த கொம்பிடை வைத்து; விண்இடம் மள்ளர்கொள்ள மிறைக்கொளி திருத்தினான்- வீரர்கள் வானிலே இடம்பெற அவ்வளைவுக்கு உண்டான இளக்கத்தைப் போக்கினான்.

 

   (வி - ம்.) 'தடாயின வேல்' என்க. தடாயின : தட என்னும் உரிச்சொல் அடியிற் பிறந்த பெயரெச்சம் . அம்ம : அசை. மிறைக் கொளி - வளைவு கொண்டது.

( 255 )
285 ஏந்தல்வே றிருத்த யானை
  யிரிந்தன வெரிபொற் கண்ணி
நாந்தக வுழவர் நண்ணார்
  கூற்றென நடுங்கி மள்ளர்
சாய்ந்தபின் றறுக ணாண்மைக்
  கட்டியங் காரன் வேழங்
காய்ந்தனன் கடுக வுந்திக்
  கப்பணஞ் சிதறி னானே..

   (இ - ள்.) ஏந்தல் வேல் திருத்த - சச்சந்தன் வேலைத் திருத்தியதால்; யானை இரிந்தன - யானைகள் ஓடின ; எரிபொன் கண்ணி நாந்தக உழவர் நண்ணார் - ஒளிவிடும் பொற்கண்ணி அணிந்த வாள்வீரர் அணுகாராய்; கூற்று என நடுங்கி மள்ளர் சாய்ந்தபின் - கூற்றுவனாகச் சச்சந்தனை எண்ணி அஞ்சி அவ்வீரர் ஓடிய பிறகு; தறுகண் ஆண்மைக் கட்டியங்காரன் காய்ந்தனன் வேழம் கடுக உந்தி - அஞ்சாத வீரனான கட்டியங்காரன் அவர்களைச் சினந்து, (மற்றொரு) யானையை விரையத் தூண்டி; கப்பணம் சிதறினான் - கப்பணம் என்னும் படையை வீசினான்.

 

   (வி - ம்.) கப்பணம் : இரும்பால் ஆன ஆனை நெஞ்சிமுள் போன்ற படை. முன் இவன் ஊர்ந்த யானை துதிக்கை வெட்டுண்டு வீழ்ந்ததால் இப்போது கடுகவுந்திய வேழம் வேறொன்று என உணர்க. நண்ணார், காய்ந்தனன் : முற்றெச்சங்கள். [நச்சினார்க்கினியர் மள்ளரை யானைகளைச் செலுத்துவோர் எனக்கொண்டு 'மள்ளர் சாய்ந்தபின் யானை இரிந்தன' என மாட்டேறு செய்வர். 'நண்ணார் : வினைமுற்று' என்பர்.]

( 256 )
286 குன்றமார் பரிந்து வெள்வேற்
  குடுமிமா மஞ்ஞை யூர்ந்து
நின்றமால் புருவம் போல
  நெரிமுரி புருவ மாக்கிக