பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1560 

நுகர்ச்சிக் காலத்தே; கூற்றுவன் செகுத்திட - காலன் உயிரைப் பற்றுதலாலே; பல்சனம் முகம் புடைத்து அகம் குழைந்து அழச் சிதைந்து முரியும் - பலரும் முகத்தில் அடித்துக்கொண்டு, உள்ளம் உருகி அழுமாறு கெட்டுவீழும்.

   (வி - ம்.) எரிபொன் : வினைத்தொகை. அரி - பரல். ”போகப் பெருநுகம் பூட்டியகாலை மகா விசும்பின் மதியமும் ஞாயிறும் எழுதலும் படுதலும்” தெரிவில் போகம் என்றவாறு. முரியினும் முரியும் என்க.

( 160 )
2759 கோதை மங்கையர் குவிமுலைத் தடத்திடைக் குளித்துக்
காதன் மக்களைக் கண்டுவந் தினிதினிற் கழிப்பப்
பேது செய்பிணிப் பெரும்புலி பாய்ந்திடப் பிணமா
மோத மாக்கட லுடைகலத் தவருற்ற துறவே.

   (இ - ள்.) கோதை மங்கையர் குவிமுலைத் தடத்திடைக் குளித்து - கோதை யணிந்த மங்கையர் குவிந்த முலையிடையே முழுகி; காதல் மக்களைக் கண்டு உவந்து இனிதினில் கழிப்ப - அன்புறு மக்களைக் கண்டு மகிழ்ந்து இனிமையாகக் காலங்கழிக்கும் அளவிலே; பேது செய்பிணிப் பெரும் புலி பாய்ந்திட - வருத்தமுண்டாக்கும் நோயாகிய பெரிய புலி பாய்ந்திட; ஓதம் மரக் கடல் உடைகலத்தவர் உற்றது உற - குளிர்ந்த பெருங் கடலிலே உடைகின்ற கலத்திலுள்ளவர் உற்ற வருத்தத்தை (உறவினர்) உறும்படி; பிணம் ஆம் - பிணமாய்க் கெடும்.

   (வி - ம்.) 'பிணமாய்' என்றும் பாடம்.

   ”வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே ஆழ்கலத்தன்ன கலி” என்றார் நாலடியினும், (12). பிணமாயினுமாம் என்க.

( 161 )
2760 காமம் பைப்பயக் கழியத்தங் கடைப்பிடி சுருங்கி
யூமர் போலத்த முரையவிந் துறுப்பினி லுரையாத்
தூய்மை யில்குளந் தூம்புவிட் டாம்பொரு ளுணர்த்தி
யீம மேறுத லொருதலை யிகலமர் கடந்தோய்.

   (இ - ள்.) காமம் பைப்பயக் கழியத் தம் கடைப்பிடி சுருங்கி - தம் இன் நுகர்ச்சி மெல்ல மெல்லக் கழிதலாலே, தம் கொள்கைகள் குறைந்து; ஊமர் போலத் தம் உரை அவிந்து - ஊமையரைப் போலத் தம்முடைய பேச்சுக்கெட்டு; உறுப்பினில் உரையா - உறுப்புக்களால் மொழிந்து; தூய்மை இல் குளம் தூம்பு விட்டு - தூய்மை இல்லாத (உடம்பாகிய) குளம் (ஒன்பது வாயிலாகிய) தூம்புகளும் (தம் வயத்தன ஆகாமல்) சேரத