பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1562 

   (இ - ள்.) செல்வ வேந்தே! - செல்வமுற்ற மன்னனே!; வெவ்வினை செய்யும் மாந்தர் - தீவினையைச் செய்யும் மக்கள்; உயிரெனும் நிலத்து வித்தி - (தம்) உயிர் என்கிற நிலத்தே அத் தீவினையை விதைத்து; அவ்வினை விளையுள் உண்ணும் அவ் விடத்து - அத் தீவினையின் பயனை நுகரும் அந்நகரத்திடத்தே; அவர்கள் துன்பம் இவ் என உரைத்தும் என்று நினைப்பினும் - அந் நரகர் படும் துன்பம் இத்தன்மைய என உரைப்பேம் என்று நினைத்திடினும்; உள்ளம் பனிக்கும் - உள்ளம் நடுங்கும் (ஆயனும்); சிறிது கூறச் செவ்விதியின் கேள் - அதன் தன்மையைச் சிறிதுரைக்கச் செவ்வையாகக் கேட்பாயாக.

   (வி - ம்.) கேண்மதி : மதி : முன்னிலை அசைச்சொல்.

   வெவ்வினை - தீவினை. வினை சூக்குமமாக உயிரிற் கலந்திருந்து பின்னர்க் காரியப்படுதலால் உயிரை நிலமாகவும் வினையை வித்தாகவும் கூறினார். உள்ளம் பனிக்கும் என்க.

( 164 )
 

   (இ - ள்.) ஊழ் வினை துரப்ப ஓடி - தீவினை தம் மனத்தைச் செலுத்துதலாலே ஓடிச் சென்று; ஒன்றும் மூழத்தத்தினுள்ளே - (அதன் பயனையெல்லாம் நுகர்தற்குப்) பொருந்தின முகூர்த்தத்திலே; பெண்ணை நெற்றித் தொடுத்த சூழ்குலைத் தீங்கனிகள் ஊழ்த்து - பனையின் நெற்றியிலே தொடுத்த சூழ உள்ள குலைகளில் இருக்கும் இனிய கனிகள் கழன்று; வீழ்வன போல வீழ்ந்து - (பெருங்காற்றாற் சேர) விழுவன போலத் தலைகீழாக வீழ்ந்து; வெருவரத் தக்க துன்பத்து ஆழ் துயர் உழப்ப - அஞ்சத்தக்க துன்பமாகிய நரகத்தே மற்றும் பெருந்துயரம் உறுவர்; ஊணும் அருநவை நஞ்சு கண்டாய் - (அவர்க்கு அவ்விடத்து) உணவும் கொடிய துன்பந்தரும் நஞ்சுகாண்.

   (வி - ம்.) ஒன்று மூழ்த்தம் - ஒரு முகூர்த்தமும் ஆம், நஞ்சு உணவாயும் சாகார், இத் தீவினையை நுகர்தற்காக. எதிர் நின்று போர் செய்யாது எளியராயிருப்பாரைச் சேரக்கொன்றார், பின்னர் இங்ஙனம் நுகர்வர்.

( 165 )