பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1566 

2769 காதலாள் கரிந்து நையக் கடியவே களைந்து கன்றி
யேதிலான் றார நம்பி யெளிதென விறந்த பாவத்
தூதுலை யுருக வெந்த வொள்ளழற் செப்புப் பாவை
யாதகா தென்னப் புல்லி யலறுமால் யானை வேந்தே.

வேந்தே.

   (இ - ள்.) யானை வேந்தே - களிற்றையுடைய மன்னனே!; காதலாள் கரிந்து நைய - தன் மனைவி வருந்தா நிற்க; ஏதிலான் தாரம் எளிது என நம்பி - அயலான் மனைவியை அடைதல் எனக்கு எளிது என்று விரும்பி; கடியவே கனைந்து கன்றி - பலரும் கடிந்து கூறவும் அதிலே செறிந்து தழும்பி; இறந்த பாவத்து - உலகியலை இறந்து செய்த பாவத்தாலே; ஊது உலை ஒள் அழல் உருக வெந்த செப்புப் பாவை - ஊதும் உலையிலே செறிந்த நெருப்பிலே உருக வெந்த செப்புப் பாவையை; ஆ தகாது என்னப் புல்லி அலறும் - (கண்டோர்) ஆ! இது தகாது ! என்னும்படி (அவ்வுயிர்கள் ) தழுவி ஆற்றாது அலறும்.

   (வி - ம்.) சிறப்புக் கருதி ஆண்பாலிற்கு மட்டும் கூறினார், எனினும் பெண்பாற்குங் கொள்க. ஏதிலான் - அயலான் - ததாரம் - மனைவி. ”எளிதென இல்லிறப்பான்” என்றார் வள்ளுவனாரும் (குறள்.145) ஊதுலை; வினைத்தொகை. ஆ : இரக்கக் குறிப்பு. ஆல் : அசை.

( 171 )
2770 சிலையினான் மாக்கள் கொன்று
  செழுங்கடல் வேட்ட மாடி
வலையினான் மீன்கள் வாரி
  வாழுயிர்க் கூற்ற மான
கொலைநரைக் குழம்பி தன்னுட்
  கொந்தழ லழுத்தி யிட்டு
நலிகுவர் நாளு நாளு
  நரகரை நாம வேலோய்.

   (இ - ள்.) நாம வேலோய்! - அச்சந்தரும் வேலையுடையவனே!; சிலையினால் மாக்கள் கொன்று - வில்லினால் விலங்குகளைக் கொன்று; செழுங்கடல் வலையினால் மீன்கள் வாரி - செழுங்கடலிலே வலையினால் மீன்களை வாரி; வேட்டம் ஆடி - (இவ்வாறு) வேட்டையாடி; வாழ்உயிர்க் கூற்றம் ஆன கொலைஞரை - உடலில் வாழும் உயிர்கட்குக் கூற்றாக இருந்த பாவிகளை; கும்பி தன்னுள் கொந்து அழல் அழுத்தியிட்டு - நரகத்திலே நெருப்பில் அழுத்தி; நரகரை நாளும் நாளும் நலிகுவர் - அந்தப் பாவிகளை நாடோறும் நாடோறும் சுடாநிற்பர்.