| முத்தி இலம்பகம் |
1567 |
|
|
|
(வி - ம்.) மாக்கள் - விலங்கு : (பறவைகளும்). கூற்றம் - இயமன் கொலைநர் - கொலைத்தொழில் செய்வோர். கும்பி - நரகம். நரமவேல் - அஞ்சுதற்குக் காரணமான வேல்.
|
( 172 ) |
| 2771 |
பாரகங் கழுநர் போலப் | |
| |
பரூஉத்தடி பலரு மேந்தி | |
| |
வீரநோய் வெகுளி தோற்றி | |
| |
விழுப்பற வதுக்கி யிட்டுக் | |
| |
காரகற் பொரிப்பர் கண்ணுட் | |
| |
சுரிகையை நடுவர் நெஞ்சிற் | |
| |
பாரக்கூர்ந் தறிக ணட்டுப் | |
| |
பனையெனப் பிளப்பர் மாதோ. | |
|
|
(இ - ள்.) பாரகம் கழுநர்போல - பாரிலுள்ளார் செய்த தீவினைகளைத் தாம் கழுவுவார்போல; பலரும் பரூஉத் தடி ஏந்தி - நிரயபாலர் பலரும் பெரிய தடிகளை ஏந்தி; வீரநோய் வெகுளி தோற்றி - வலிய நோயைத் தருஞ் சீற்றத்தைக் காட்டி; விழுப்புஅற அதுக்கியிட்டு - (அவர்களுடம்பிற்) கழிவது ஒன்றும் இல்லையாம்படி கூட நருக்கியிட்டு; காரகல் பொரிப்பர் - (சிலரைக்) காரகலிலே பொரிப்பர்; கண்ணுள் சுரிகைல் நடுவர் - (சிலரைக்) கண்ணிலே குத்துவாளை நடுவர்; (நெஞ்சில்) பாரக்கூர்ந் தறிகள் நட்டுப் பனையெனப் பிளப்பர் - (சிலயை நெஞ்சிலை பெரிய கூரிய முளைகளை புடைத்துப் பனைபோலப் பிளப்பர்.
|
|
(வி - ம்.) பல்லுயிரும்தாம் செய்த வினையைத் தாமே நுகரினும் அதனை முயன்று நுகர்வித்துக் கழிப்பராதலின், 'கழுநர்போல்' என்றார். இஃது ஒப்பில் பாலி.
|
( 173 ) |
| 2772 |
நாப்புடை பெயர்த்த லாற்றார் | |
| |
நயந்துநீர் வேட்டு நோக்கிப் | |
| |
பூப்புடை யணிந்த பொய்கை | |
| |
புக்குநீ ருண்ண லுற்றாற் | |
| |
சீப்படு குழம்ப தாகிச் | |
| |
செல்லலுற் றந்தோ வென்னக் | |
| |
கூப்பிடு குரலாய் நிற்பர் | |
| |
குறைப்பனைக் குழாங்க ளொத்தே. | |
|
|
(இ - ள்.) நீர் வேட்டு - நீரை விரும்பி; நாப்புடை பெயர்த்தல் ஆற்றார் - நாவை (வறட்சியால்) அசைத்தல் ஆற்றாராய்; பூப்புடை அணிந்த பொகைய் நயந்து நோக்கி - பூ மலர்ந்த
|