| முத்தி இலம்பகம் |
1569 |
|
|
| |
|
(இ - ள்.) வெந்து உருக்குற்ற செம்பின் விதவையுள் - வெந்து உருகுதல் உற்ற செம்பாலான குழம்பிலே; அழுத்தி யிட்டும் - (நிரய பாலரால்) அழுத்தியிடப்பட்டும்; எந்திர ஊசல் ஏற்றி எரிஉண மடுத்தும் - பொறியமைப்புள்ள ஊசலில் ஏற்றிக் கீழே நெருப்பை மூட்டி எரிக்கப்பட்டும்; செக்கில் சுந்து எழுந்துபோக அரைத்தும் - செக்கிலே இட்டு நீறெழுந்து போக அரைக்கப்பட்டும்; சுண்ணம் ஆ நுணுக்கியிட்டும் - சுண்ணமாக நுணுக்கியிடப்பட்டும்; மந்தரத்து அனைய துன்பம் - மந்தரமலை போற் பெரிய துன்பத்திலே; வைகலும் உழப்ப - நாடொறும் வருந்துவர்.
|
|
(வி - ம்.) விதவை - குழம்பு. ”மானிணப் புழுக்கலொடு தேனெய் விதவையின்” (2. 12 : 113) என்றார் கதையினும். சுந்து - நீறு. இதற்கு நீர் என்று நச்சினார்க்கினியர் உரையுளது. நீறு என்று பாட பேதமும் உளது. இப்பாடமே சிறந்ததென்று தோன்றுகிறது. மந்தரம் - ஒருமலை : இது பண்பு பற்றி வந்தவுவமை.
|
( 176 ) |
| 2775 |
உழும்பகட் டெருது போல | |
| |
வுரனறு தாள ராகிக் | |
| |
கொழுங்களி யளற்றுள் வீழ்ந்துங் | |
| |
கொழும்புகை மடுக்கப் பட்டு | |
| |
மழுந்துமிந் நரகந் தன்னுட் | |
| |
செல்பவர் யார்கொ லென்னி | |
| |
னெழுந்துவண் டிமிரும் பைந்தா | |
| |
ரிறைவநீ கேண்மோ வென்றான். | |
|
|
(இ - ள்.) வண்டு எழுந்து இமிரும் - வண்டுகள் எழுந்து முரலுகிற; பைந்தார் இறைவ! - பசிய மாலையணிந்த இறைவனே!; உழும்பகட்டு எருதுபோல உரன் அறு தாளர் ஆகி - உழுகின்ற பெரிய எருதுபோல வலியற்ற தாளராய்; கொழுங்களி அளற்றுள் வீழ்ந்தும் - மிகுதியாகச் செறிந்த சேற்றினுள்ளே வீழ்ந்தும்; கொழும்புகை மடுக்கப்பட்டும் - (ஆண்டு நின்றெழ) மிகுதியான புகையால் மடுக்கப்பட்டும்; அழுந்தும் இந் நரகந்தன்னுள் செல்பவர் யார்கொல் என்னின் - அழுந்துகின்ற இந் நரகத்திலே செல்கின்றவர் யாவரெனின்; நீகேள் என்றான் - நீ கேட்பாயாக என்றான்.
|