நாமகள் இலம்பகம் |
157 |
|
286 |
கொன்றவன் வேழம் வீழ்ப்ப |
|
மற்றுமோர் களிற்றிற் பாய்ந்து |
|
நின்றமா மள்ளர்க் கெல்லா |
|
நீண்முடி யிலக்கம் ஆனான். |
|
(இ - ள்.) வெள்வேல் குன்றம் மார்பு அரிந்து - வெள்ளிய வேலாலே கிரவுஞ்சம் என்னும் குன்றின் மார்பைப் பிளந்து; குடுமி மாமஞ்ஞை ஊர்ந்துநின்ற - உச்சிக்கொண்டையையுடைய பெரிய மயிலைச் செலுத்தி நின்ற ; மால் புருவம்போல நெரிமுரி புருவம் ஆக்கி - முருகன் புருவம்போல நெரித்து வளைந்த புருவமுடையவனாய்; அவன் வேழம் கொன்று வீழ்ப்ப- கட்டியங்காரனின் வேழத்தைக் கொன்று வீழ்த்த; மற்றும்ஓர் களிற்றில் பாய்ந்து - அவன் வேறொரு யானையின்மேற் பாய்தலாலே; நின்ற மாமள்ளர்க்கு எல்லாம் நீள்முடி இலக்கம் ஆனான் - நிலைபெற்ற பெரிய வீரர்க்கெல்லாம் நீண்ட முடியையுடைய சச்சந்தன குறிக்கோளானான்.
|
|
(வி - ம்.) ஊர்தல் : போதல்; 'வானூர் மதியம்' (நாலடி. 125) போல. மால் - முருகன். நீள்முடி : சினையாகுபெயர். [சச்சந்தன் ஊர்தியின்றி நின்றதால் மயிலூர்தலாகிய உவமையை மட்டும் நீக்குக.]
|
( 257 ) |
வேறு
|
|
287 |
நஞ்சுபதி கொண்டவள நாகணையி னான்ற |
|
னெஞ்சுபதி கொண்டுபடை மூழ்கநிலம் வீசு |
|
மஞ்சுதவழ் குன்றனைய தோளொசிந்து மாத்தாட் |
|
குஞ்சரங்க ணூறிக்கொலை வாளொடிந்து நின்றான். |
|
(இ - ள்.) நஞ்சுபதி கொண்டவளம் நாகஅணையி னான் தன் - நஞ்சு பதிதலையுடைய வளமிகும் பாம்பணையினான் ஆகிய சச்சந்தனின்; நெஞ்சு பதிகொண்டு படைமூழ்க - மார்பை இடமாகக்கொண்டு (வீரர்) படை மூழ்கவும்; நிலம்வீசும் மஞ்சுதவழ் குன்று அனைய தோள்ஒசிந்து - நிலத்திலுள்ளார்க்குப் பொருள்களை வழங்கும், முகில் தவழும் குன்றம் அனைய தோள்ஒடிய; மாத்தாள் குஞ்சரங்கள் நூறி - பருத்த கால்களையுடைய யானைகளை வெட்டி; கொலைவாள் ஒடிந்து நின்றான் - அதனாற் கொலைக்குரிய வாளை முரித்து நின்றான்.
|
|
(வி - ம்.) நாக + அணை: நாகணை: அகரம் தொக்கது. நாகணையினான்: திருமால்; ஈண்டுச் சச்சந்தனுக்காயிற்று. ஒசிந்து: வினையெச்சத் திரிபு. நிலம்: இடவாகுபெயர். தன் தோளில் வலிமையுள்ளவரை யானைகளை வெட்டினான். வெட்டியதால் வாளும் ஒடிந்தது. 'நஞ்சு மதி
|
|