பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1570 

   (வி - ம்.) 'துன்னினரழுந்து நரகம் என்ப.'

   பகட்டெருது - பெரிய எருது. கிழப்பட்ட பகட்டெருதுபோல என்க. உரன் - வலிமை. தாளர் - காலையுடையோர். அளறு - சேறு. யார்கொல் என்புழி, கொல் அசை. இறைவ என்றது சீவகனை. மோ : முன்னிலையசை.

( 177 )
2776 கொல்வதே கன்றி நின்றார்
  கொடியவர் கடிய நீரா
ரில்லையே யிம்மை யல்லா
  லும்மையு முயிரு மென்பா
ரல்லதுந் தவமு மில்லை
  தானமு மிழவென் பாருஞ்
செல்பவந் நரகந் தன்னுட்
  டீவினைத் தோ்க ளூர்ந்தே.

   (இ - ள்.) கொல்வதே கன்றி நின்றார் - கொலைத் தொழிலிலே அடிப்பட்டு நின்றாரும்; கொடியவர் - நெஞ்சு கொடியரும்; கடிய நீரார் - கடிய தொழில் செய்வாரும்; இம்மை அல்லால் உம்மையும் உயிரும் இல்லையே என்பார் - இப் பிறப்பேயன்றி மறுமையும் இல்லை, உயிர்க் கிழவனும் இல்லை என்பாரும்; அல்லதும் - அல்லாமலும்; தவமும் இல்லை தானமும் இழவு என்பாரும் - தவம் இல்லை தானம் பயன்தராது என்பாரும்; தீவினைத் தேர்கள் ஊர்ந்து அந் நரகந்தன்னுள் செல்ப - தீவினையாகிய தேர்களில் ஏறி அந் நரகத்திலே செல்வார்கள்.

   (வி - ம்.) 'அல்லதும் தவமும் இல்லை' என்பதைத் 'தவமும் தவமல்லதும் இல்லை' என ஆக்கி 'நல்வினையும் தீவினையும் இல்லை' என்று பொருள் கூறுவர் நச்சினாக்கினியர். இதுவும் பொருந்தும்.

( 178 )

11. விலங்குகதித் துன்பம்

வேறு

2777 எரிநீர வேநரக மந்நரகத் துன்பத்
தொருநீர வேவிலங்கு தாமுடைய துன்பம்
பெருநீர வாட்டடங்கட் பெண்ணணங்கு பூந்தா
ரருநீர வேந்தடர்த்த வச்சணங்கு வேலோய்.

   (இ - ள்.) பெருநீரை வாள் தடங்கண் பெண் அணங்கு பூந்தார் - பெரிய நீர்மையுடைய ஒளி பொருந்திய பரந்த கண்களையுடைய மகளிரை வருத்தும் மலர்த் தாரினையும்; அருநீர வேந்து அடர்த்த அச்சு அணங்கு வேலோய்! - அடங்குதற்கரிய