| முத்தி இலம்பகம் |
1571 |
|
|
|
தன்மையுடைய வேந்தர்களை அடக்கிய வலியினையும் வருத்தும் வேலினையும் உடைய வேந்தனே!; நரகம் எரிநீரவே - நரகம் எப்போதும் எரியும் தன்மையவே; விலங்குதாமுடைய துன்பம் அந்நரகத்து ஒருநீரவே - விலங்குகள் கொண்ட துன்பம் அந் நரகத்திலே பல்லுயிரும் உறும் துன்பத்துடன் ஒரு தன்மையவே.
|
|
(வி - ம்.) எரி - நெருப்புமாம். ஒருநீர - ஒருதன்மையுடையன. தாம் : அசை. அணங்கு - வருத்துகின்ற. அச்சு அணங்கு - அஞ்சுதற்குக் காரணமான வருத்தம் எனினுமாம்.
|
( 179 ) |
| 2778 |
கழைபொதிர்ப்பத் தேன்சொரிந்து | |
| |
காய்த்தினைக ளார்த்து | |
| |
மழை தவழுங் குன்றில் | |
| |
வயமா முழங்க | |
| |
வுழையளிய தாமுறூஉந் | |
| |
துன்பங்க ணின்மேல் | |
| |
விழைவயரா வேந்துறூஉந் | |
| |
துன்பமே கண்டாய். | |
|
|
(இ - ள்.) கழை பொதிர்ப்பத் தேன் சொரிந்து காய்த்தினைகள் ஆர்த்தும் - (இறாலிலே) மூங்கில் துளைக்க அது தேனைப் பெய்து காயையுடைய தினைகளை ஊட்டுகிற; மழை தவழும் குன்றில் - முகில் உலாவும் குன்றிலே; வயமா முழங்க - புலிகள் முழங்க; அளிய உழைதாம் உறூஉம் துன்பங்கள் - இரங்கத்தக்க மான்கள் அடையும் துன்பங்கள்; நின்மேல் விழைவு அயரா வேந்து உறூஉம் துன்பமே கண்டாய் - நின்னிடத்து விருப்பங்காட்டாத வேந்தர்கள் உறும் துன்பமென்றே அறிக.
|
|
(வி - ம்.) கழை - மூங்கில். பொதிர்த்தல் - துளைத்தல். காய்த்த : ஈறுகெட்ட தெனினுமாம். தினையை ஆர்த்தும் குன்று, மழை தவழும் குன்று எனத் தனித்தனி கூட்டுக. வயமா - புலி. உழை - மான்.
|
( 180 ) |
| 2779 |
நிணம்பிலிற்றும் வாயர் நெருப்பிமைக்குங் கண்ணர் | |
| |
குணனஞ்சர் கூற்றனைய கோணாய் மடுப்பக் | |
| |
கணமஞ்ஞை யஞ்சிக் கழுத்தொளிப்ப கண்டாய் | |
| |
மணமல்கு பூந்தார் மழைதழீஇய கையாய். | |
| |
|
|
(இ - ள்.) மணம் மல்கு பூந்தார் மழை தழீஇய கையாய்! - மணம் நிறைந்த மலர்த் தாரினையும் முகிலைத் தழுவிய கையினையும் உடையாய்!; நிணம் பிலிற்றும் வாயர் - நிணம் துளிக்கும் வாயராய்; நெருப்பு இமைக்கும் கண்ணர் - நெருப்பென இமைக்
|