| முத்தி இலம்பகம் |
1573 |
|
|
|
(வி - ம்.) மனா : 'மனவு', என்னும் செய்யுட் சொல் விகாரமாயிற்று. பெண்ணுக்கு இரக்கம் இயல்பாக உண்டெனினும், அவளே இவ்வாறு அறுக்கின்றனள் என்பதை விளக்க 'மங்கை குறைப்ப' என்றார். இனி, 'மங்கை அணியும் மனவு எனினும் ஆம். அழுதல் : பழைய தன்மைகெட்டு வருந்துதல் : அஃது அசைவு என்னும் மெய்ப்பாடாம் . யார் கண்ணே நோக்கும் என்றது செய்தவர் கண்ணே அன்றி ஏவினார் கண்ணும் உடம்பட்டார் கண்ணும் செல்லும் என்றவாறு.
|
( 183 ) |
| 2782 |
கடலரண மாகாது காடரண மாகா | |
| |
குடலரண மாகாது குன்றரண மாகா | |
| |
வடுதுயர மூர்ந்தலைப்ப வாங்கரணங் காணாப் | |
| |
படுதுயரத் தாலே பதைத்தளிய வேமே. | |
| |
|
|
(இ - ள்.) ஆங்கு அரணம் காணா அளிய - தாம் செல்கின்ற கதிக்குக் காவலாகிய நல்வினை முன் செய்யாத இரங்கத் தக்க விலங்குகள்; அடுதுயரம் ஊர்ந்து அலைப்ப - தம்மை வருத்தும் தீவினை சென்று அலைத்தலாலே; கடல் அரணம் ஆகாது - கடல் காவல் ஆகாமலும்; காடு அரணம் ஆகா - காடுகள் காவல் ஆகாமலும்; குடல் அரணம் ஆகாது - குடல் காவல் ஆகாமலும்; குன்று அரணம் ஆகா - மலைகள் காவல் ஆகாமலும்; படுதுயரத்தாலே பதைத்து வேம் - மேலும் மேலும் உண்டாகும் துயரத்தாலே பதைத்துவேம்.
|
|
(வி - ம்.) 'ஆங்கு' என்றது தாம்செல்கிற விலங்கு கதியை; விலங்கு கதியிலே எங்கும் காப்பான இடம் இல்லை என்றபடி. 'அரணம்' என்றது அதற்குக் காவலாகிய நல்வினையை. 'காணா அளிய' எனக் கூட்டுக. குடலிற் கிடந்தவையும் நோயான் வருந்திவிடும் என்றான். 'ஆகா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். ”'ஆகா' என்ற பன்மையை 'ஆகா வாய்' என விரித்து, 'ஆகாமல் ' என உரைக்க” என்பர் நச்சினார்க்கினியர்
|
( 184 ) |
| 2783 |
முழுப்பதகர் தாடுரந்து முட்டாற்றிற் குத்தி | |
| |
யுழப்பெருது பொன்றப் புடைத்துழுது விட்டாற் | |
| |
கழித்துண்ணுங் காக்கை கடிவோரு மின்றிப் | |
| |
புழுச்சொரியத் துன்பம் பொறுக்கலா பொன்றும். | |
| |
|
|
(இ - ள்.) முழுப்பதகர் உழப்பு எருது தாள் துரந்து - முற்றிலும் தீவினையாளர் உழைக்கும் எருதைத் தம் முயற்சியாலே ஓட்டி; முள் தாற்றில் குத்தி - முள்ளையுடைய தாற்றுக் கோலாலே குத்தியும்; பொன்றப் புடைத்து - சாம்படி அடித்தும்; உழுது விட்டால் - உழுது (முடிந்தபின்) கைவிட்டால்; கழித்து உண்ணும் காக்கை - (ஊனை என்பிலிருந்து) நீக்கித் தின்னும் காக்கையை; கடிவோரும் இன்றி - ஓட்டுவாரும்
|