| முத்தி இலம்பகம் |
1574 |
|
|
|
இல்லாமல்; புழுச் சொரிய - புழுக்கள் சிந்த; துன்பம் பொறுக்கலா பொன்றும் - துன்பம் பொறுக்க இயலாது சாகும்.
|
|
(வி - ம்.) அறிவு நுழைதற்கு வழியிலராய்த், தீவினை செய்யலாகா தென்பார்க்குப் பதகங் கூறுவார் 'முழுப்பதகர்' ; பதிதர் என்பதன் விகாரம் 'பதகர்' என்றும் ஆம்; பாதகர் பதகர் என விகாரமும் ஆம்.
|
( 185 ) |
| 2784 |
நிரம்பாத நீர்யாற் றிடுமணலு ளாழ்ந்து | |
| |
பெரும்பரா வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி | |
| |
மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி | |
| |
யுரங்கெட் டுறுப்பழுகிப் புல்லுண்ணா பொன்றும். | |
| |
|
|
(இ - ள்.) நிரம்பாத நீர் யாற்று - சிறியதாகிய நீரை உடைய யாற்றிலே; இடுமணலுள் ஆழ்ந்து - பெருமணலில் வண்டி ஆழ்ந்து போதலாலே; பெரும்பார ஆடவர்போல் - மிகுதியான சுமையையுடைய ஆடவரைப்போல; பெய் பண்டம் தாங்கி - தன்னிடம் பெய்த பண்டத்தைச் சுமந்து; மருங்கு ஒற்றி மூக்கு ஊன்றி - (தமக்குப் போகலா) நிலத்தைச் சார்ந்து மூக்கை நிலத்திலே ஊன்றி; தாள் தவழ்ந்து - மடி முழந்தாள் இட்டு; வாங்கி - இழுத்து; உரம் கெட்டு - தம் வலியெல்லாங் கெட்டு; உறுப்பு அழுகி - பின்பு உறுப்புக்கள் அழுகி; புல் உண்ணா பொன்றும் - புல்லுண்ணாமற் சாகும்.
|
|
(வி - ம்.) இச் செய்யுளினது தன்மை நவிற்சியிலீடுபட்ட பரிமேலழகர் திருக்குறள் (624) உரையின்கண் ”மருங்கொற்றியும் மூக்கூன்றியும் தாடவழ்ந்தும்” என இதன் சொற்றொடரை எடுத்தமைத்துள்ளனர்.
|
( 186 ) |
| 2785 |
போழ்மதிபோற் கூரிரும்பிற் | |
| |
பூநுதல்கள் போழ்ந்திடவுங் | |
| |
காழ்நுதியிற் குத்துண்டுங் | |
| |
கார்மழைபோ னின்றதிர்ந்தும் | |
| |
வீழ்பிடிகள் சிந்தித்தும் | |
| |
வெந்நோய்தம் முள்சுடவெந் | |
| |
தாழத்த கந்திளக | |
| |
யானை யலம்வருமே. | |
|
|
(இ - ள்.) போழ்மதிபோல் கூரிரும்பின் - பிளந்த திங்கள் போலும் கூரிய தோட்டியினாலே; பூ நுதல்கள் போழ்ந்திடவும் பூவனைய புள்ளிகளையுடைய மத்தகங்கள் பிளக்கப்பட்டும்; காழ்நுதியின் குத்துண்டும் - குத்துக்கோலின் - நுனியினாற் குத்தப்பட்டும்; கார் மழைபோல் நின்று அதிர்ந்தும் - (அவை பொறா)
|