| முத்தி இலம்பகம் |
1575 |
|
|
|
மற்) கரிய முகிலைப்போல் நின்று பிளிறியும்; வெம் நோய் தம் உள் சுட வெந்து - காம நோய் தம் உள்ளத்தைச் சுடுதலாலே வெந்து; வீழ் பிடிகள் சிந்தித்தும் - தாம் விரும்பிய பிடிகளை நினைத்தும்; ஆழந்த கந்து இளக - ஆழ நாட்டின் தூண்கள் இளக; யானை அலம்பரும் - யானைகள் சுழன்றுகொண்டிருக்கும்.
|
|
(வி - ம்.) மதிப்போழ் என மாறினும் அமையும்; இது தோட்டிக் குவமை. பூப்போலும் புள்ளிகளையுடைய நுதல் என்க. காழ் - ஈண்டுக் குத்துக்கோல். நுதி - நுனி. கார்காலத்து மழை என்க. கட்டுண்டு கிடத்தலின் பிடியைச் சிந்தித்தன என்க. கந்து - தூண். அலம்வரும் - சுழலும்.
|
( 187 ) |
| 2786 |
எரிவளைப்ப வெம்புகையுண் டின்னுயிர்விட் டேகு | |
| |
மரிவளைப்பக் குஞ்சரமு மாலிபோ னீராம் | |
| |
வரிவளைக்கும் வெண்மயிர்க்கு முத்திற்கு மாந்தர் | |
| |
திருவளைத்த மார்ப செகுத்திடுவர் தேங்கார். | |
| |
|
|
(இ - ள்.) திரு வளைத்த மார்ப - திருவைக் கவர்ந்த மார்பனே!; எரி வளைப்ப வெம்புகை உண்டு இன் உயிர் விட்டு ஏகும் - (சில விலங்குகள்) தீச் சூழ்தலாலே கொடிய புகையால் விழுங்கப்பட்டு இனிய உயிரை விட்டுப் போய்விடும்; அரி வளைப்பக் குஞ்சரமும் (இன் உயிர் விட்டு ஏகும்) - சிங்கத்தாற் சூழப்பட்டு யானைகளும் இனிய உயிர்விட்டு நீங்கும்; நீர் ஆம் வரிவளைக்கும் - நீரிலிருந்து கிடைக்கும் வரிவளைக்குச் சங்கையும்; வெண் மயிர்க்கும் - வெண்மையான மயிர்க்குக் கவரிமானையும்; ஆலிபோல் முத்திற்கும் - நீர்த்துளிபோன்ற முத்திற்குச் சிப்பியையும்; மாந்தர் தேங்கார் செகுத்திடுவர் - மக்கள் வருந்தாராய்க் கொன்றிடுவர்.
|
|
(வி - ம்.) எரி - ஈண்டுக் காட்டுத்தீ. அரி - சிங்கம். குஞ்சரம் - யானை. நீரிலே உண்டாகும் வரிவளை என்க. வரிவளையின் பொருட்டுச் சங்கையும் முத்தின் பொருட்டு இப்பியையும் மயிரின் பொருட்டுக் கவரியையும், மாந்தர் செகுத்திடுவர் என்று தகுதியால் வருவித்தோதுக. ஆலிபோல் முத்திற்கும் எனக் கூட்டுக.
|
( 188 ) |
| 2787 |
வேள்விவாய்க் கண்படுத்தும் | |
| |
வெவ்வினைசெ யாடவர்கை | |
| |
வாளின்வாய்க் கண்படுத்தும் | |
| |
வாரணத்தி னீருரிபோற் | |
| |
கோளிமிழ்ப்பு நீள்வலைவாய்க் | |
| |
கண்படுத்து மின்னணமே | |
| |
நாளுலப்பித் திட்டார் | |
| |
நமரலா தாரெல்லாம் | |
|