| முத்தி இலம்பகம் |
1576 |
|
|
|
(இ - ள்.) வேள்வி வாய்க் கண் படுத்தும் - வேள்வியினிடத்தே கொன்றும்; வெவ்வினை செய் ஆடவர் கை வாளின் வாய்க் கண் படுத்தும் - கொடிய கொலைத்தொழிலைச் செய்யும் ஆடவரின் கையிலேந்திய வாளினாலே கொன்றும்; கோள் இமிழ்ப்பு நீள் வலைவாய்க் கண்படுத்தும் - கொலைக்குரிய கட்டப்பட்ட நீண்ட வலையினிடத்தே கொன்றும்; நமர் அலாதார் எல்லாம் - நம்முடைய சமயத்தைச் சாராத பிறர் எல்லாரும்; வாரணத்தின் ஈருரிபோல் - யானையின் பசுந்தோல் போர்த்தவர்க்குக் கேடாயினாற் போல; இன்னணமே நாள் உலப்பித் திட்டார் - இவ்வாறே தங்கள் வாழ்நாளைத் தேய்ப்பித்திட்டார்.
|
|
(வி - ம்.) யானையின் பசுந்தோல் பிறர் உடம்பிற் பட்டாற் கொல்லும். அத்தோலைப் போர்த்தவர் கெட்டாற்போல இவர்களும் தமக்கு நன்மைதருமென்றெண்ணி உயிர்க்கொலை செய்து கொட்டரென்று உவமை கொள்க. வாரணத்தின் உரிபோல் தப்பாமற் கொல்லும் வலையெனினும் பொருந்தும். 'கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண் மேற் - செல்லா துயிருண்ணுங் கூற்று,' (குறள் - 389) என்றார் பிறரும். இமிழ்ப்பு - கட்டு.
|
( 189 ) |
| 2788 |
கொல்வாருங் கூட்டுட் செறிப்பாரு மாடவர்க | |
| |
ளல்லாரு நாய்வேட்ட மாடாத மாத்திரையே | |
| |
யால்லாத பைங்கிளியும் பூவையு மாதியா | |
| |
வெல்லாங் கிளைபிரித்திட் டேமுறுநோய் செய்பவே. | |
| |
|
|
(இ - ள்.) ஆடவர்கள் அல்லாரும் - ஆடவரே அன்றி மகளிரும்; நாய்வேட்டம் ஆடாத மாத்திரையே - நாய் வேட்டையாக வெளிவந்து ஆடாத அவ்வளவே; கொல்வாரும் - (கருனையாக்குவதற்குக்) கொல்வாரும்; அல்லாத - (கருனைக்குத்) தகாத; பைங்கிளியும் பூவையும் ஆதியா எல்லாம் - பச்சைக்கிளி பூவை முதலாக எல்லாவற்றையும்; கிளை பிரித்திட்டுக் கூட்டுள் செறிப்பாரும் - உறவிலிருந்து பிரித்துக் கூட்டில் அடைத்து வைப்பாரும் ஆகி; ஏம்உறு நோய் செய்ப - வருந்துதற்குரிய நோயைச் செய்வார்கள்.
|
|
(வி - ம்.) அல்லாரும் : உம் : எச்ச உம்மை. மகளிர் உள்ளிருந்தும் பாவமே செய்கின்றனர் என்பதாம்.
|
( 190 ) |
| 2789 |
மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும் | |
| |
பல்லவரே யன்றிப் பகுட்ததுணாப் பாவிகளு | |
| |
மல்குல் விலைபகரு மாய்தொடிய ராதியார் | |
| |
வில்பொருதோண் மன்னா விலங்காய்ப் பிறப்பவே. | |
| |
|
|
(இ - ள்.) வில் பொரு தோள் மன்னா! - வில் தாக்கும் தோளையுடைய வேந்தனே!; மல்லல் மலை அனைய மாதவரை
|