| முத்தி இலம்பகம் |
1578 |
|
|
|
கின்ற மலமாகிய தம் உடம்பைப் போர்த்த போர்வையைப் புழுக்கள் மொய்ப்ப; பொல்லாக் குடர் சூடி - அழகல்லாத குடரைச் சூடியிருந்து; சார்தற்கு அரிது ஆகி - (தூய்மை செய்யாக்கால்) நெருங்குதற்கு அரியதாகி; அள்ளல் தான் நின்று அறா - சேறு நிலைத்து நீங்காத; நீர் வாய்ச்சுரம் போந்தார் - நீரை இடத்தே உடைய சுரத்தின் வழியே வந்த மக்கள்; தம்மை நினையாரோ? தம் தூய்மையை நினையார்களோ?
|
|
(வி - ம்.) நினையாமைலேயே தம்மை வியக்கின்றனர் என்றபடி. ஓகாரம் : எதிர்மறை. இனி, மலபிண்டத்திற் பிறந்த புழு, தடியையும் மூடித் தம்மையும் மொய்ப்ப என்பாரும் உளர்.
|
( 193 ) |
| 2792 |
அஞ்சொன் மடவார்த மார்வக் களிபொங்க | |
| |
நெஞ்சத் தயிலேற்று நீள்வெங் கழுவீர்ந்துங் | |
| |
குஞ்சிக் களியானைக் கேட்டா லுழப்பட்டுந் | |
| |
துஞ்சிற் றுலகந்தோ துன்பக் கடலுள்ளே. | |
| |
|
|
(இ - ள்.) அம்சொல் மடவார்தம் ஆர்வக் களிபொங்க - அழகிய மொழியையுடைய மகளிரிடத்துப் பிறந்த அவாவினாற் களிப்பு மிகுதலின்; நெஞ்சத்து அயில் ஏற்றும் - நெஞ்சிலே வேலை ஏற்றும்; நீள் வெம் கழு ஊர்ந்தும் - (அவர்க்குப் பொருள் தரக் களவுசெய்து) நீண்ட கொடிய கழுவில் ஏறியும்; குஞ்சிக் களியானைக் கோட்டால் உழப்பட்டும் - மத்தகத்தில் மயிரை உடைய மதயானையின் கொம்பினால் உழப்பட்டும்; துன்பக் கடலுள்ளே உலகம் துஞ்சிற்று - துன்பக் கடலிலே உலகம் அழுந்தியது.
|
|
(வி - ம்.) அந்தோ! : இரக்கக் குறிப்பு.
|
|
ஆர்வக்களி - அவாவாலுண்டாய மயக்கம். அவரைப் பெறுதற்கு நெஞ்சிலயிலேற்றும், அவர்க்குப் பொருள் கொடுத்தற் பொருட்டுக் களவு கொண்டு கழுவேறியும் என்பது கருத்து. குஞ்சி என்றமையால் யானை களிற்றியானை என்றாராயிற்று.
|
( 194 ) |
| 2793 |
பண்ணார் களிறேபோற் பாயோங் குயர்நாவாய் | |
| |
கண்ணார் கடன்மண்டிக் காற்றிற் கவிழுங்கான் | |
| |
மண்ணார் மணிப்பூணோய் மக்க ளுறுந்துன்ப | |
| |
நண்ணா நரகத்தி னான்கா மடியன்றே. | |
| |
|
|
(இ - ள்.) மண் ஆர் மணிப்பூணோய் - கழுவிய மணிக்கலன் உடையாய்; பண்ஆர் களிறேபோல் - புனையப்பட்ட களிற்றைப் போல; பாய் ஓங்கு உயர் நாவாய் - பாய் விரித்த உயர்ந்தோங்கிய மலக்கலம்; கண்ஆர் கடல் மண்டிக் காற்றில் கவிழுங்கால் - இடம் பரவிய கடலிலே ஓடிக் காற்றிலே கவிழும்போது; மக்கள்
|