நாமகள் இலம்பகம் |
158 |
|
கொண்ட ' என்பது பாடமாயின் திருமால் உட்கொண்ட சக்கரம் என்க' [மதியனைய சக்கரம்.]
|
|
'தோளசைந்து' என்றும் பாடம்.
|
( 258 ) |
288 |
ஆரமரு ளாண்டகையு மன்னவகை வீழும் |
|
வீரரெறி வெம்படைகள் வீழவிமை யானாய்ப் |
|
பேரமரு ளன்றுபெருந் தாதையொடும் பேராப் |
|
போரமரு ணின்றவிளை யோனிற்பொலி வுற்றான். |
|
(இ - ள்.) ஆண்டகையும் ஆர்அமருள் அன்னவகை வீழும் வீரர்எறி வெம்படைகள் - ஆடவரிற் சிறப்புற்ற சச்சந்தனும் நிறைந்த போரில் முற்கூறியவாறு விரும்பும் வீரர் எறிகின்ற வெவ்விய படைகள்; வீழ இமையானாய் - வீழும்போதும் இமையாதவனாகி; அன்று பேர் அமருள் பெருந்தாதையொடும் பேரா - முற்காலத்திலே பெரும் போராகிய பாதப் போரிலே தன் பெரிய தந்தையான கன்னனுடனே மாறுபட்டுப் புறங்கொடாமல்; போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான் - பொரும் போரிலே நிலைத்துநின்ற அபிமன்னனைப்போலப் பொலிவு பெற்றான்.
|
|
(வி - ம்.) வீழும்- விரும்பும். இனி, 1'நீடும்' பாடமாயின் நெடும் பொழுதாம்; 'நீடு நின்றனன்' என்றார் பிறரும்.
|
|
ஆண்டகை - சச்சந்தன். ”விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு” (குறள், 775) என்பது பற்றி 'இமையானாய்' என்றார். பேரமர் என்றது பாரதப் போரினை, அன்று என்றது உலகறி சுட்டு. பெருந்தாதை - கன்னன். இளையோன் - அபிமன்.
|
( 259 ) |
289 |
போழ்ந்துகதிர் நேமியொடு வேல்பொரு தழுந்தத் |
|
தாழ்ந்துதறு கண்ணிணைக டீயழல விழியா |
|
வீழ்ந்துநில மாமகடன் வெம்முலை ஞெமுங்க |
|
வாழ்ந்துபடு வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான். |
|
(இ - ள்.) கதிர் நேமியொடு வேல்பொருது போழ்ந்து அழுந்த - ஒளிவிடும் ஆழியும் வேலும் தாக்கிப் பிளந்து அழுந்துதலாலே; தாழ்ந்து - மெய்வலி குறைந்து; தறுகண் இணைகள் தீஅழல் விழியா வீழ்ந்து - அஞ்சாத இரு கண்களும் தீயைச் சொரிய விழித்தவாறு வீழ்ந்து ; மாநில மகள்தன் வெம்முலை ஞெமுங்க ஆழ்ந்து - பெருநில மகளிரின் விருப்பமூட்டும் முலைகள்
|
|
|
1. 'நீடும் போரமருள்.'
|
|