பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1580 

2796 மாலைக் குடைமன்னர் வைய மகற்றுவான்
காலைக் கதிதுன்பங் காவல் பெருந்துன்பஞ்
சோலை மயிலன்னார் தோள்சோ் விலராயின்
வேலைக் கடலேபோற் றுன்பம் விளையுமே.

   (இ - ள்.) மாலைக் குடை மன்னர் - மாலையுங்குடையும் உடைய வேந்தர்; வையம் அகற்றுவான்காலை - நாட்டைப் பெருக்குதற்குச் செல்லுங்காலத்தே, கதி துன்பம் - போக்குந்துன்பம்; காவல் பெருந்துன்பம் - ஆட்சியும் பெரிய துன்பம்; சோலை மயில் அன்னார் தோள் சேர்வு இலராயின் - சோலை மயில் போன்ற மகளிரின் தோளைத் தழுவாராயின்; வேலைக் கடலே போல் துன்பம் விளையும் - கரையுறு கடலேபோலத் துன்பம் பெருகும்.

   (வி - ம்.) அகற்றுதல் - அகலச் செய்தல். அகற்றுவான் காலை - அகற்றுதற்குப் போகுங் காலம். கதி - மேற்சேறல். காவல் - காத்தற்றெழில். வேலை - கரை.

( 198 )
2797 ஊன்சே ருடம்பென்னு மோங்கன் மரச்சோலை
தான்சோ் பிணியென்னுஞ் செந்தீக் கொடிதங்கிக்
கான்சோ் கவினென்னுங் காமர் மலர்வாடத்
தேன்சோ் மலர்மார்ப தீத்திட் டிறங்குமே.

   (இ - ள்.) தேன்சேர் மலர் மார்ப - தேன் பொருந்திய மலர் மார்பனே!; ஊன்சேர் உடம்பு என்னும் ஓங்கல் மரச்சோலை - ஊன் பொருந்திய மெய்யென்னும் உயர்ந்த மரச்செறிவிலே; சேர்பிணி யென்னும் செந்தீக் கொடி தங்கி - சேர்ந்த பிணி என்னும் தீயொழுங்கு அதனைவிட்டுப் போகாமல் தங்கி; கான்சேர் கவின் என்னும் காமர் மலர் வாட - மணம் பொருந்திய அழகு என்கிற விருப்பூட்டும் மலர் வாட; தீத்திட்டு இறக்கும் - (அப்பொழிலை) வேகச்செய்து தானும் இறந்துபோம்.

   (வி - ம்.) ஓங்கல் - உயர்தலையுடைய. தீக்கொடி - தீயொழுங்கு. கான்சேர் மலர், காமர் மலர் என்று தனித்தனி கூட்டுக. தீத்திட்டு : ஒருசொல்; தீத்து என்க; (சுட்டு) பிணி தீத்திட்டுத் தானும் இறக்கும்.

( 199 )
2798 கொட்டுப் பிடிபோலுங் கூனும் குறளாமை
விட்டு நடப்பனபோற் சிந்தும் விளைந்துசீ
யட்டு முயவுநோ யல்லாப் பிறநோயும்
பட்டா ருறுதுன்பம் பன்னிச் சொலலாமோ.

   (இ - ள்.) கொட்டிப் பிடிபோலும் கூனும் - களைக்கொட்டின் பிடியைப்போலும் கூனரும்; குறள் - குறளரும்; ஆமை