பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1584 

   (வி - ம்.) ததைதல் - செறிதல். ஏ - அம்பு, ஈண்டுக் காமனம்புகளாகிய மலரம்புகள் - இவை மாதர் எண் முதலியவற்றிற்குவமை. இனி, காமன் அம்பை வழங்குவதற்குக் காரணமான கொடியன்னார் எனினு

2803 சிதரரி யொழுகி யோடிச் செவியுறப் போழ்ந்து நீண்ட
மதரரி மழைக்க ணம்பா வாங்குவிற் புருவ மாகத்
துதைமணிக் கலாப மின்னத் தொன்மலர்க் காம னம்பு
புதைமலர் மார்பத் தெய்யப் பூவணை மயங்கி வீழ்வார்.

   (இ - ள்.) காமன் தொன்மலர் அம்பு புதைமலர் மார்பத்து - காமனுடைய பழைய மலர்க்கணைகள் புதைந்து வானவரின் மலர்ந்த மார்பிலே; சிதர் அரி ஒழுகி ஓடிச் செவியுறப் போழ்ந்து நீண்ட - சிதரின் செவ்வரியுடைய, நீண்டு சென்று செவியை உறவும் பிளந்து நீண்ட; மதர் அரி மழைக்கண் அம்புஆ - கதிர்த்த அழகுற்ற மழைக்கண் அம்பாகவும்; வாங்குவில் புருவம் ஆக - புருவம் வளைந்த வில்லாகவும் (கொண்டு); எய்ய மயங்கி - அரம்பையர் எய்தலாலே மயங்கி; துதை மணிக்கலாபம் மின்ன வீழ்வார் - (அம்மங்கையரின்) நெருங்கிய மணிகளையுடைய கலாபம் ஒளிர (அணையிலே தழுவி) வீழ்வர்.

   (வி - ம்.) கலாபம் மின்ன அணையிலே வீழ்வர் என்றது இடக்கரடக்கு. ”கலாபம் மின்ன என்றது புணர்ச்சியை” என்றார் நச்சினார்க்கினியர். சிதரரி : வினைத்தொகை.

( 205 )
2804 பூத்ததை கொம்பு போன்று
  பொன்னிழை சுடரு மேனி
யேத்தருங் கொடிய னாரை
  யிருநடு வாகப் புல்லிக்
காய்த்தியிட் டுள்ளம் வெம்பிக்
  கடைந்திடு கின்ற காம
நீத்துநீர்க் கடலை நீந்தும்
  புணையென விடுத்தல் செல்லார்.

   (இ - ள்.) பூத் ததை கொம்பு போன்று - மலர் செறிந்த கொம்பு போன்று; பொன் இழை சுடரும் மேனி - பொன்னணி விளங்கும் மேனியையுடைய; ஏத் தரும் கொடியனாரை - காமன் அம்பைத்தரும் கொடிபோன்றவரை; இரு நடு ஆகப் புல்லி - இடை யிரண்டாகத் தழுவி; உள்ளம் வெம்பிக் காய்த்தியிட்டு - மனம் வெதும்பச் சுட்டு; கடைந்திடுகின்ற காமம் நீத்து நீர்க்கடலை நீந்தும் புணையென - தம் உளத்தைக் கடையும் காம வெள்ளமாகிய நீரினையுடைய கடலை நீந்தும் புணையென (அம்மங்கையரை எண்ணி); விடுத்தல செல்லார் - நீங்கிச் செல்லார்.