பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1585 

   மாம். வெம்பி - வெம்ப. புணை - தெப்பம். விடுத்தல் செல்லார் : ஒருசொன்னீர்மைத்து.

( 206 )
2805 பொங்கல்வெம் முலைக ளென்னும்
  போதொடு பொருது பூந்தா
ரங்கலந் தொடையன் மாலை
  கிழிந்தழ கழிய வைகிக்
கொங்கலர் கோதை நல்லார்
  குரைகட லமிர்த மாகத்
தங்கலர் பருகி யாரார்
  தாழ்ந்துகண் ணிமைத்தல் செல்லார்.

   (இ - ள்.) பொங்கல் வெம் முலைகள் என்னும் போதொடு பொருது - பெருமையும் விருப்பமும் உடைய முலைகளாகிய தாமரை முகைகளுடன் பொருது; அம் கலம் தொடையல் மாலை பூந்தார் - அழகிய கலனணிந்த மார்பிலே, தொடுத்த மாலையாகிய மலர்த்தார்; கிழிந்து அழகழிய - தோற்று அழகழிய; வைகி - (அவர்களுடன்) கூடியிருந்து; கொங்கு அலர் கோதை நல்லார் குரை கடல் அமிர்தம் ஆக - மணம் விரியும் மாலையணிந்த அரம்பையரை, ஒலிக்குங் கடலில் தோன்றிய அமிர்தமாக எண்ணி; தங்கலர் பருகி - விடாமற் பருகி; ஆரார் - மன நிறைவுறாராய்; தாழ்ந்து கண் இமைத்தல் செல்லார் - (அவர்களிடமே) தங்கிக் கண்கள் இமையாராயினார்.

   (வி - ம்.) பொங்கல் - பெருமை. அழகிய கலத்தினையும் தொடையன் மாலையினையும் உடைய மார்பு என்க. கொங்கு - நறுமணம். குரைகடல் : வினைத்தொகை. ஆரார் - தெவிட்டாராய். தங்கலர் - அமையாராய்.

( 207 )
2806 கருவியின் னிசைக ளார்ப்பக்
  கற்பக மரத்தி னீழற்
பொருகய லனைய கண்ணும்
  புருவமு மரவஞ் செய்ய
வரவமே கலைக ளம்பொற்
  கிண்கிணி சிலம்பொ டார்ப்பத்
திருவனா ராடல் கண்டுந்
  திருவொடு திளைத்து மானார்.

   (இ - ள்.) கற்பக மரத்தின் நீழல் - (அவர்கள்) : கற்பக மரத்தின் நீழலிலே (அமர்ந்து); இன்னிசைக் கருவிகள் ஆர்ப்ப - நால்வகையான இனிய இசைக்கருவிகள் ஆர்ப்ப; பொரு