பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1586 

கயல் அனைய கண்ணும் புருவமும் அரவம் செய்ய - காதொடு மோதும் கயல் போன்ற கண்களும் புருவமும் மனத்தைக் கலக்க; அரவ மேகலைகள் அம்பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப - ஒலிக்குரிய மேகலைகளும் அழகிய பொற்கிண்கிணிகளும் சிலம்பும் ஆரவாரிக்க; திருவனார் ஆடல்கண்டும் - திருமகளைப்போன்ற அரம்பையரின் ஆடலைக் கண்டும்; திருவொடு திளைத்தும் ஆனார் - செல்வத்துடனே பிற விளையாட்டுக்களில் ஈடுபட்டும் அமையாராய்,

   (வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.

   கருவி - ஈண்டிசைக் கருவிகள். பொருகயல் - தம்முட் போர் செய்யும் கயற்கெண்டைகள். அரவஞ் செய்ய - மனத்தைக் கலக்க. ”புருவமு முருவஞ்செய்ய” என்றும் பாடம். திருவனார் என்புழித் திரு திருமகள்; திருவொடு என்புழிச் செல்வம் என்க. ஆனார் - அமையார்.

( 208 )
2807 பனிமுகின் முளைத்த நான்கு
  பசுங்கதிர்த் திங்க ளொப்பக்
குனிமருப் புழுது மேகங்
  குஞ்சரங் குனிந்து குத்த
வினிதினி னிலங்கு பொற்றோ
  டேற்றுமின் குழைகள் பொங்கத்
துனிவிலர் களிற்றோ டாடித்
  தொழுதகத் கழிப்பர் வேந்தே.

   (இ - ள்.) வேந்தே! - அரசனே!; பனிமுகில் முளைத்த நான்கு பசுங்கதிர்த் திங்கள் ஒப்ப - வெண்முகிலிடையே முளைத்த நான்கு பசிய கதிர்களையுடைய பிறைத்திங்கள்களைப்போல; குனி மருப்புக் குஞ்சரம் குனிந்து மேகம் உழுது குத்த - வளைந்த கொம்புகளாலே வெள்ளையானை தாழ்ந்து முகிலை உழுது குத்தும் படி; இலங்குபொன் தோடு ஏற்று மின் குழைகள் பொங்க - வீளங்கும் பொன் தோடுடன் பொருந்தி ஒளிவிடும் குழைகள் பொங்கும்படி; துனிவிலர் இனிதினின் களிற்றோடு ஆடி - வெறுப்பிலராய் இனிமையாகக் களிற்றுடன் விளையாடி; தொழுதகக் கழிப்பர் - (பிறர் கண்டு) விரும்பிம்படி பொழுது போக்குவர்.

   (வி - ம்.) வெள்ளையானைக்கு நான்கு கோடுகள் உண்டு. வெள்ளை யானையை முகிலுடன் பொருமாறு விடுத்து விளையாடுவர்.

( 209 )
2808 கடிகைவா ளார மின்னக்
  கற்பகக் காவு கண்டுந்
தொடிகவி னறாத மென்றோட்
  டேவியர் சூழ வாம