பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1587 

2808 னடிகையிற் றொழுது பூத்தூ
  யஞ்சலி செய்து வீடே
முடிகவிப் பிறவி வேண்டே
  முனைவவென் றிரப்ப வன்றே.

   (இ - ள்.) கற்பகக் காவு கண்டும் - (இங்ஙனம்) கற்பகக் காவில் இன்பங் கண்டாலும்; தொடிகவின் அறாத மென்தோள் தேவியர் சூழ - வளையணிந்த அழகு மாறாத மெல்லிய தோள்களையுடைய, தேவியர் சூழ; கடிகை வாள் ஆரம்மின்ன - தோள் வளையும் ஒளிதரும் ஆரமும் மின்னிச் (சென்று); வாமன் அடி கையின் தொழுது - அருகன் அடியைக் கையாலே கும்பிட்டு; பூத்தூய் அஞ்சலி செய்து - மலரிட்டு மறுபடியும் கைகூப்பி; முனைவ! - முன்னவனே!; இப்பிறவி வேண்டேம் - இவ்வானவர் கதி வேண்டா; வீடே முடிக - வீடே எமக்குக் கிடைப்பதாகுக; என்று இரப்ப - என்று வேண்டுவர்.

   (வி - ம்.) கடிகை. தோள்வளை. காவு - சோலை. வாமன் - அருகக் கடவுள். தூய் - தூவி. அஞ்சலி செய்து - வணங்கி. வீடே என்புழி ஏகாரம் பிரிநிலை. முனைவ : விளி. அன்றும் ஏயும் அசைகள்.

( 210 )
2809 மலங்குவித் தாவி வாட்டி
  வாய்நிறை யமிர்தம் பெய்த
விலங்குபொற் கலச மன்ன
  வெரிமணி முலைகள் பாயக்
கலந்தனர் சென்ற பின்னாட்
  கதிர்கழன் றிருந்த வெய்யோன்
புலம்புபோற் புலம்பித் தேவர்
  பொற்புகுத் திருப்ப வன்றே.

   (இ - ள்.) வாய் நிறை அமிர்தம் பெய்த இலங்கு பொன் கலசம் அன்ன எரிமணி முலைகள் - வாயளவும் நிறைய அமிர்தம் பெய்த விளங்கும் பொற்கலசம் போன்ற, ஒளிவிடும் மணிகள் அணிந்த முலைகள்; மலங்குவித்து ஆவி வாட்டிப் பாய - மயக்குறுத்தி உயிரை வாட்டிப் பாய்தலினாலே; கலந்தனர் சென்ற பின்னாள் - கலந்து சென்ற பின்னாளிலே; கதிர் கழன்று இருந்த வெய்யோன் புலம்புபோல் - ஒளியை இழந்து நின்ற ஞாயிற்றின் வருத்தம்போல; தேவர் புலம்பிப் பொற்பு உகுத்து இருப்ப - வானவர் வருந்திப்பொலிவைப் போக்கி இருப்பர்.

   (வி - ம்.) 'மலம் குவித்து ஆவி வாட்டி - பற்று ஆர்வம் செற்றம் முதலிய மலங்களைத் திரட்டித் தமக்குள்ள ஆயுளை அவமே போக்கி' - எனலுமாம்.

( 211 )