முத்தி இலம்பகம் |
1588 |
|
|
2810 |
எல்லைமூ வைந்து நாள்க | |
|
ளுளவென விமைக்குங் கண்ணு | |
|
நல்லெழின் மாலை வாடு | |
|
நஞ்சுடை யமிர்துண் டாரிற் | |
|
பல்பகற் றுய்த்த வின்பம் | |
|
பழுதெனக் கவல்ப கண்டாய் | |
|
பில்கித்தே னொழுகும் பைந்தார்ப் | |
|
பெருநில வேந்தர் வேந்தே. | |
|
(இ - ள்.) தேன் பில்கி ஒழுகும் பைந்தார்ப் பெருநில வேந்தர் வேந்தே! - தேன் துளித்து ஒழுகும் பசிய தாரணிந்த பெருநில மன்னருக்கும் மன்னனே!; எல்லை மூவைந்து நாட்கள் உள என - (அவர்கள் உயிர் நீங்கும்) எல்லை பதினைந்து நாட்கள் இருக்கின்றன என்னும்போது; கண்ணும் இமைக்கும் - கண்களும் இமைக்கும்; நல் எழில் மாலை வாடும் - நல்லழகுடைய மாலையும் வாடும்; நஞ்சு உடை அமிர்து உண்டாரின் - நஞ்சு கலந்த அமிர்தம் உண்டவரைப்போல; பல்பகல் துய்த்த இன்பம் பழுதுஎனக் கவல்ப கண்டாய் - பல நாளும் தாங்கள் நுகர்ந்த இன்பம் குற்றமுடையது என்று வருந்துவர்காண்.
|
(வி - ம்.) தம் காலத்தை வறிதே கழித்ததாக எண்ணி வருந்துவர்.
|
எல்லை - அப்பிறப்பு ஒழிதற்குரிய எல்லை. கண்ணும் இமைக்கும் என்க. மாலையும் வாடும் எனல்வேண்டிய உம்மை தொக்கது : செய்யுள் விகாரம். கவல்ப - கவலையடைவர்.
|
( 212 ) |
2811 |
தேவரே தாமு மாகித் | |
|
தேவராற் றொழிக்கப் பட்டு | |
|
மேவல்செய் திறைஞ்சிக் கேட்டு | |
|
மணிகமாப் பணிகள் செய்து | |
|
நோவது பெரிதுந் துன்ப | |
|
நோயினுட் பிறத்த றுன்பம் | |
|
யாவதுந் துன்ப மன்னா | |
|
யாக்கைகொண் டவர்கட் கென்றான். | |
|
(இ - ள்.) தாமும் தேவரே ஆகி - தாமும் தேவரேயாயிருந்தும்; தேவரால் தொழிக்கப்பட்டும் - வேறு தேவராலே வெகுளப்பட்டும்; இறைஞ்சிக்கேட்டு ஏவல் செய்தும் - வணங்கிக் கேட்டுப் பணிபுரிந்தும்; அணிகம் மாப்பணிகள் செய்தும் - அணிகலங்களிலே பெரிய அணிகளைச் செய்து கொடுத்தும்; நோவது பெரிதும் துன்பம் - வருந்துவது பெரிய துன்பம்;
|