முத்தி இலம்பகம் |
1589 |
|
|
நோயினுள் பிறத்தல் துன்பம் - நோயைத் தரும் மக்களாயும் விலங்காயும் பிறத்தலும் துன்பம்; மன்னா! - அரசே!; யாவதும் யாக்கை கொண்டவர்கட்குத் துன்பம் என்றான் - எந்த உடம்பெடுத்தவர்கட்கும் துன்பமே என்றான்.
|
(வி - ம்.) அணிதிரிந்து அணிகம் ஆயிற்று. பணிகள் செய்வார் : மயன் முதலியோர். 'நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழை' (முருகு.18) என்றார் பிறரும். இனி, 'ஊர்திகளாகிப் பணிகள் செய்தும்' என்பாருமுளர்; வாகன தேவதைகளாகி என்பதாம். அணிகம் - ஊர்தி.
|
( 213 ) |
14. நற்காட்சி
|
வேறு
|
2812 |
கொங்கு விம்மு குளிர்பிண்டிக் | |
|
குழவி ஞாயிற் றெழிலேய்ப்பச் | |
|
சிங்கஞ் சுமந்த மணியணைமேற் | |
|
றேவ ரேத்திச் சிறப்பயர | |
|
வெங்கு முலக மிருணீங்க | |
|
விருந்த வெந்தை பெருமானார் | |
|
தங்கு செந்தா மரையடியென் | |
|
றலைய வேயென் றலையவே. | |
|
(இ - ள்.) கொங்கு விம்மு குளிர் பிண்டி - மணம் விரியும் தண்ணிய அசோகின் நிழலிலே; சிங்கம் சுமந்த மணி அணைமேல் - சிங்கத்தாற் சுமக்கப்பட்ட மாணிக்க அணையின் மேலே; தேவர் ஏத்திச் சிறப்பு அயர - வானவர் வாழ்த்திச் சிறப்புச் செய்ய; குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்ப - இளஞாயிற்றின் அழகு போல; உலகம் எங்கும் இருள் நீங்க - உலகெங்கும் பொருந்திய இருள் விலக; இருந்த எந்தை பெருமானார் - வீற்றிருந்த எந்தையாகிய பெருமானாரின்; செந்தாமரை தங்கு அடி - செந்தாமரையின்மேல் தங்கின திருவடிகள்; என் தலையவே என் தலையவே - என் தலையிடத்தனவே, என் தலையிடத்தனவே;
|
(வி - ம்.) அடுக்கு விரைவுப் பொருட்டு. இருள் - பிற தெய்வங்களைத் தெய்வம் எனக் கருதுதல்.
|
( 214 ) |
2813 |
இலங்கு செம்பொ னெயின் மூன்று | |
|
மெரிபொன் முத்தக் குடைமூன்றும் | |
|
வலங்கொண் டலர்தூஉ யடியேத்தும் | |
|
வைய மூன்றும் படைமூன்றும் | |
|
|