நாமகள் இலம்பகம் |
159 |
|
அழுந்த அழுந்தி ; படுவெஞ்சுடரின் ஆண்தகை அவிந்தான். - மறையும் வெவ்விய கதிரவன்போல ஆண்தகைமை குறைந்தான்,
|
|
(வி - ம்.) ஆண்டகைமை: குணப்பண்பு; 'ஆண்டகைக் குரவிர்' (சீவக. 393) போல. அவிதல் - குறைதல், 'திரைபாடவிய' (அகநா. 260) என்றாற்போல. ஆண்டகையைப் பண்பியாக்கிச் சச்சந்தன் பட்டான் எனின், 'பாலருவி' (சீவக. 291) என்னுங் கவி வேண்டாவாம். இவன் பகைவர் முகம் நோக்கி வீழ்தலின், பிள்ளையார் பின்பு பகை வென்றார்.
|
|
இச் செய்யுளின்கண் நச்சினார்க்கினியர் ஆண்டகை என்பதற்குச் சச்சந்தன் என்னாது ஆண்தகைமை என்று பொருள்கூறி அதற்குக் கூறும் விளக்கம் கற்றோரை இன்பத்தில் ஆழ்த்துவதாம். நிலமாமகள் வெம்முலை ஞெமுங்க என்றது, நூலாசிரியர் சச்சந்தன் கழிகாமத்தாற் கெட்டமை கருதிக் கூறியதாம்.
|
( 260 ) |
வேறு
|
|
290 |
தோய்ந்த விசும்பென்னுந் தொன்னாட் டகந்தொழுது |
|
புலம்பெய்தி மைந்தர் மாழ்க |
|
ஏந்து முலையாரி னைந்திரங்கக் கொடுங்கோ |
|
லிருள்பரப்ப வேஎ பாவ |
|
மாய்ந்த குருகுலமா மாழ்கடலி னுண்முளைத்த |
|
அறச்செங் கோலாய் கதிரினை |
|
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரிமா |
|
நாகமுடன் விழுங்கிற் றன்றே. |
|
(இ - ள்.) தோய்ந்த விசும்பு என்னும் தொன்னாட்டகம் - மக்கள் பொருந்திய விண்ணுலகம் என்று பாராட்டப்பட்ட ஏமாங்கதத்திலே; மைந்தர் தொழுது புலம்பு எய்தி மாழ்க - சான்றோர் கைகூப்பித் தனிமையுற்று வருந்த; ஏந்தும் முலையார் இணைந்து இரங்க - மகளிர் துன்புற்றழ; கொடுங்கோல் இருள் பரப்ப - கொடுங்கோல் தன் இருளைப் பரப்ப; வேந்தர் பெருமானை - மன்னர் மன்னனை; சச்சந்தனை - சச்சந்தனை; ஆய்ந்த குருகுலம் ஆம் ஆழ்கடலினுள் முளைத்த அறச்செங்கோல் ஆய்கதிரினை - நல்லதென்று தேர்ந்த குருகுலம் என்னும் ஆழமாகிய கடலில் தோன்றிய அறமாகிய செங்கோலைக்கொண்ட ஆராய்ந்த ஞாயிற்றை; மந்திரி மாநாகம் உடன் விழுங்கிற்று -அமைச்சனாகிய பெரும் பாம்பு அரசுரிமை யெல்லாஞ்சேர விழுங்கியது; ஏஎ பாவம்! - ஐயோ பாவம்!
|
|
(வி - ம்.) 'கடலாங் குருகுலம்' சிறப்பு நிலைக்களமாக முதலொடு முதலே வந்த மெய்யுவமம் (தொல். உவம. 4) 'மந்திரி மாநாகம் ' கீழான பொருள் நிலைக்களமாக முதலொடு முதலே வந்த வினையுவமம்' (தொல்.
|
|