பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1590 

2813 கலங்கா துயர்ந்த வதிசயங்கண்
  மூன்றுங் காமர் நூன்மூன்று
நலங்கொ டீம்பாற் குணக்கடலு
  முடையார் நம்மை யுடையாரே.

   (இ - ள்.) இலங்கு செம்பொன் எயில் மூன்றும் - விளக்கமுடைய பொன் மதில் மூன்றும்; எரி பொன் முத்தக் குடை மூன்றும் - பொன்னாலாகிய, முத்துக்கள் இழைத்த குடைகள் மூன்றும்; வலம் கொண்டு அலர்தூய் அடி ஏத்தும் வையம் மூன்றும் - வலமாக வந்து மலரையிட்டுத் திருவடிகளை வணங்குகின்ற உலகம் மூன்றும்; படை மூன்றும் - படைக்கலன்கள் மூன்றும்; கலங்காது உயர்ந்த அதிசயங்கள் மூன்றும் - கலக்கமின்றி மேம்பட்ட அதிசயங்கள் மூன்றும்; காமர் நூல் மூன்றும் - விருப்பந்தரும் ஆகமங்கள் மூன்றும்; நலம் கொள் தீம்பால் குணக்கடலும் - நலந்தருகின்ற இனிய பாலாகிய குணக்கடலும்; உடையார் நம்மை உடையார் - இயற்கையாக உடையவர் நம்மை யுடையராவார்.

   (வி - ம்.) எயின்மூன்றாவன : உதயதரம், பிரிதிதரம், கல்யாணதரம் என்க; குடைமூன்றாவன : சந்திராதித்தியம், நித்தியவினோதம், சகலபாசனம் என்க; உலகம் மூன்றாவன. நாகலோகம், பூலோகம், சுவர்க்கலோகம் என்க; படைமூன்றாவன; இரத்தினத்திரயம்; அவை : நற்காட்சி, நன்ஞானம,் நல்லொழுக்கம் என்க. அதிசயம்மூன்றாவன; சகசாதிசயம் கர்மக்ஷயாதிசயம,் தெய்விகாதிசயம். நூன்மூன்றாவன : அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதியாகமம். குணக்கடல் - அனந்தஞானம் முதலியகுணங்கள்.

( 215 )
2814 மன்ற னாறு மணிமுடிமேன்
  மலிந்த சூளா மணிபோலும்
வென்றோர் பெருமா னறவாழி
  வேந்தன் விரிபூந் தாமரைமேற்
சென்ற திருவா ரடியேத்தித்
  தெளியும் பொருள்க ளோரைந்து
மன்றி யாறு மொன்பானு
  மாகு மென்பா ரறவோரே.

   (இ - ள்.) மன்றல் நாறும் அணிமுடிமேல் - மணங்கமழும் அழகிய முடியின்மேல் (அணிந்த); மலிந்த சூளாமணிபோலும் - நிறைந்த முடிமணி போலும்; வென்றோர் பெருமான் - முனிவர் தலைவனும்; அறவாழி வேந்தன் - அறக்கடலாகிய வேந்தனும் ஆகிய அருகனின்; விரி பூந்தாமரை மேல் சென்ற திருஆர் அடி ஏத்தி - மலர்ந்த தாமரை மலர்மேற் சென்ற அழகு நிறைந்த