பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1592 

2816 உறுவர்ப் பேண லுவர்ப்பின்மை
  யுலையா வின்பந் தலைநிற்ற
லறிவர் சிறப்பிற் கெதிர்விரும்ப
  லழிந்தோர் நிறுத்த லறம்பகர்தல்
சிறியா ரினத்துச் சோ்வின்மை
   சினங்கை விடுதல் செருக்கவித்த
லிறைவ னறத்து ளார்க்கெல்லா
  மினிய ராத லிதுதெளிவே

   (இ - ள்.) உறுவர்ப் பேணல் - மிக்கோரை விரும்புதல்; உவர்ப்பு இன்மை - வெறுப்பு இல்லாமை ; உலையா இன்பம் தலை நிற்றல் - கெடாத இன்பமாகிய வீட்டை அடையுங் கருத்துத் தம்மிடத்தே நிற்றல்; அறிவர் சிறப்பிற்கு எதிர் விரும்பல் - அறிவற்குச் செய்யும் வழிபாட்டிற்கு எதிர் விரும்புதல்; அழிந்தோர் நிறுத்தல் - கெட்டோரைப் பழைய நிலையிலே நிறுத்தல்; அறம் பகர்தல் - அறத்தைக் கூறுதல்; சிறியார் இனத்துச் சேர்வு இன்மை - இழிந்தோர் குழுவிலே சேராதிருத்தல்; சினம் கை விடுதல் - சினத்தை நீக்குதல்; செருக்கு அவித்தல் - செருக்கைப் போக்குதல்; இறைவன் அறத்துளார்க்கு எல்லாம் இனியர் ஆதல் - அருகன் அறத்திலே ஈடுபட்டார்க்கெல்லாம் இனியராக நடத்தல்; இது தெளிவு - இத்தன்மையே பரமாகமப் பொருளைத் தெளிந்த தெளிவாகும்.

   (வி - ம்.) உறுவர் - மிக்கோர்; உறு - மிகுதி : உரிச்சொல். உவர்ப்பு - வெறுப்பு. அழிந்தோர் - கெட்டவர். பகர்தல் - கூறுதல். சிறியார் - கயமாக்கள். இறைவனறம் - அருகன் அறம்.

( 218 )
2817 செறியச் சொன்ன பொருடெளிந்தார்
  சேரார் விலங்கிற் பெண்ணாகார்
குறுகார் நரக மோரேழுங்
  கீழ்முத் தேவர் குழாந்தீண்டா
ரறியா துரைத்தே னதுநிற்க
   வாறே நரக மாகாத
பொறியார் போக பூமியுள்
  விலங்குமாவ ரொரு சாரார்.

   (இ - ள்.) சொன்ன பொருள் செறியத் தெளிந்தார் - யான் கூறிய பொருளைச் செறிவுறத் தெளிந்தவர்கள்; விலங்கிற் சேரார் - விலங்கொடு கூடார்; பெண் ஆகார் - பெண்ணாகமாட்டார்; நரகம் ஓர் ஏழும் குறுகார் - நரகம் ஏழினையும் அடையார்;