பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1593 

கீழ் முத்தேவர் குழாம் தீண்டார் - கீழான முத்தேவர் திரளைத் தொடார்; அறியாது உரைத்தேன் - நரகம் ஏழென அறியாமற் கூறினேன்; அது நிற்க - அது கிடக்க; ஆறே நரகம் ஆகாத - ஆறு நரகங்களே ஆகாதவை; பொறி ஆர் போக பூமியுள் விலங்கும் ஒரு சாரார் ஆவர் - நல்வினை நிறைந்த போகபூமியிலே விலங்காகவும் ஒரு சாரார் பிறப்பர் (அதனால் ஆறே நரகம்).

   (வி - ம்.) நரகம் ஏழாவன; இரத்தினப்பிரபை, சருக்கராப்பிரபை, வாலுகாப்பிரபை, பங்கப் பிரபை, தூமப்பிரபை, தமப்பிரபை, தமத்தமப்பிரபை என இவை, கீழ் முத் தேவராவார் : பவணர், வியந்தரர், ஜ்யோதிஷ்கர், ஆகாத நரகம் ஆறே என்றது முன்பே நரகாயுஷ்யம் கட்டின பின்பு தரிசனங் கொண்டவர், முதல் நரகத்திலே முதற் புரையிலே நரகராயும், விலங்காயுஷ்யம் கட்டின பின்பு தரிசனங்கொண்டவர் போக பூமியிலே விலங்காயும் பிறப்பர் என்றதென்க.

( 219 )

15 சீலம்

வேறு

2818 ஏத்தருந் திருமணி யிலங்கு நீர்மைய
கோத்தன போற்குண நூற்றுக் கோடியுங்
காத்தன காவல பதினெண் ணாயிரம்
பாத்தன பண்ணவர் சீல மென்பவே.

   (இ - ள்.) காவல! - அரசனே!; இலங்கும் நீர்மைய - விளங்குந் தன்மையவாகிய; ஏந்தருந் திருமணி கோத்தன போல் - புகழ்தற்கரிய திருமணியைக் கோத்தன போன்ற; பாத்தன குணம் - எண்பத்து நான்கு நூறாயிரமாகப் பகுக்கப் பட்டனவாகிய குணவிரதங்களும்; நூற்றுக்கோடியும் - நூற்றுக் கோடி மகா விரதங்களும்; பதினெண்ணாயிரம் சீலம் - பதினெட்டாயிரம் சீலாசாரங்களும்; பண்ணவர் பாத்தன - பண்ணவராற் காக்கப்பட்டன.

   (வி - ம்.) என்ப, ஏ : அசைகள்.

   ஏத்து - புகழ்தல், குணம் - குணவிரதம், பாத்தன - பகுக்கப்பட்டன. காவல : விளி. பண்ணவர் - என்றது துறவியரை. இதிற் கூறப்பட்டவை துறவிகட்குரிய நாட்கடன்கள் என்க.

( 220 )
2819 மொய்யமர் ஞாட்பினுண் முரண்கொண் மன்னவர்
மெய்புகு பொன்னணி கவச மொப்பன
மையலைம் பொறிமதம் வாட்டி வைகலுஞ்
செய்வினை நுணுக்குவ சீல மென்பவே.

   (இ - ள்.) சீலம் என்ப - (அவற்றுள்) சீலமெனப்படுவன; மொய் அமர் ஞாட்பினுள் - வலிமை மேவின போரிலே; முரண்