பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1594 

கொள் மன்னவர் - மாறுகொண்ட வேந்தர்களின்; மெய்புகு பொன் அணி கவசம் ஒப்பன - மெய் சென்று மறையும் பொன்னாலாகிய கவசத்தை ஒப்பனவாய்; வைகலும் - நாடோறும்; மையல் ஐம்பொறி மதம் வாட்டி - உண்ணின்று மயக்கமூட்டும் ஐம்பொறியின் செருக்கையும் வாட்டி; செய்வினை நுணுக்குவ - புறத்துச் செய்யும் தீவினையையும் குறைப்பன.

   (வி - ம்.) மொய் - வலிமை. ஞாட்பு - போர். முரண் - பகைமை. மையல் - மயக்கம். ஐம்பொறி - மெய்வாய்கண் மூக்குச்செவி. வினை - ஈண்டுத் தீவினை. சீலங்கள் தீவினையைத் தேய்ப்பனவாம் என்பதாம்.

( 221 )
2820 மணித்துண ரனையதங் குஞ்சி வண்கையாற்
பணித்தனர் பறித்தலிற் பரவை மாநிலந்
துணித்தொரு துணிசுமந் தனைய திண்பொறை
யணித்தகு முடியினா யாதி யாகவே.

   (இ - ள்.) அணித்தகு முடியினாய்! - அழகிய முடியுடையாய்! மணித்துணர் அனைய - நீலமணியின் கொத்துப் போன்ற; தம் குஞ்சி - தம் சிகையை; வண்கையாற் பறித்தலின் - தம் கையாற் பறித்துக் கொள்வதால்; பரவை மாநிலம் துணித்து - பரப்புடைய இம் மாநிலத்தை இருகூறாக்கி; ஒரு துணி சுமந்த அனைய திண்பொறை - ஒரு கூற்றைச் சுமந்தாற் போன்ற இத்திண்ணிய பொறுமையை; ஆதி ஆகவே பணித்தனர் - முதன்மையாகவே பணித்தார்கள்.

   (வி - ம்.) ஒரு துணியோடு உவமித்தலின், ஏனைய ஒரு கூறும் இஃது ஒரு கூறுமாகக் கூறினான், அருமையால் என்றுணர்க, 'மணித்துணர் அனைய குஞ்சி' என்பதை, 'மணியனைய துணர்க்குஞ்சி' என்று மாற்றுவர் நச்சினார்க்கினியா.்

( 222 )

வேறு

2821 பெரியவாட் டடங்கட் செவ்வாய்ப்
  பிறர்மனை பிழைக்கு மாந்தர்
மா¦இயவாய்ப் புறஞ்சொற் கூர்முண்
  மத்திகைப் புடையு மன்றி
யொருவர்வா யுமிழப் பட்ட
   தம்பல மொருவர் வாய்க்கொண்
டரியவை செய்ப வையத்
  தாண்பிறந் தார்க ளன்றே.

   (இ - ள்.) பெரிய வாள் தடங்கண் செவ்வாய்ப் பிறர்மனை அவாய் மெரீஇ பிழைக்கும் மாந்தர் - பெரிய வாளனைய தடங்