பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1596 

16. தானம்

2823 நன்னிலத் திட்ட வித்தி
  னயம்வர விளைந்து செல்வம்
பின்னிலம் பெருக வீனும்
  பெறலருங் கொடையும் பேசிற்
புன்னிலத் திட்ட வித்திற்
   புற்கென விளைந்து போக
மின்னெனத் துறக்குந் தானத்
  தியற்கையும் விரித்து மன்றே.

   (இ - ள்.) நல் நிலத்து இட்டவித்தின் - நல்ல நிலத்திலே விதைத்த விலைபோல; நயம்வர விளைந்து - விருப்பம் உண்டாக விளைந்து; பின் நிலம் பெருகச் செல்வம் ஈனும் - பிறகு, உலகிலே பெருகும்படி செல்வத்தைத் தருகின்ற; பெறல் அருங் கொடையும் - பெறுதற்கரிய தலைமை பெற்ற கொடையின் இயற்கையையும்; பேசின் - கூறுமளவில்; புல் நிலத்து இட்ட வித்தின் - பொல்லா நிலத்திலே விதைத்த விதைபோல; புற்கென விளைந்து - பொல்லாததாக விளைந்து போகம் மின் எனத் துறக்கும் - இன்பம் நிலைத்து நில்லாமல் மின்போலத் தோன்றி மாய்கின்ற; தானத்து இயற்கையும் - இடைப்பட்ட தானத்தின் இயற்கையையும்; விரித்தும் - (இனி) விரித்துக் கூறுவோம்.

   (வி - ம்.) ”உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி

இறப்ப நிழற்பயந்தா அங்கறப்பயனுந்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்

   வான்சிறிதாப் போர்த்து விடும்” என்றார் நாலடியினும் (38)

( 225 )
2824 ஐவகைப் பொறியும் வாட்டி
  யாமையி னடங்கி யைந்தின்
மெய்வகை தெரியுஞ் சிந்தை
   விளக்குநின் றெரிய விட்டுப்
பொய்கொலை களவு காம
   மவாவிருள் புகாது போற்றிச்
செய்தவ நுனித்த சீலக்
  கனைகதிர்த் திங்க ளொப்பார்.

   (இ - ள்.) ஐவகைப் பொறியும் வாட்டி - ஐந்து பொறிகளையும் வருத்தி; ஆமையின் அடங்கி - ஆமைபோல அடங்கி;