முத்தி இலம்பகம் |
1598 |
|
|
2826 |
பாற்கதிர்த் திங்கட் கொட்பிற் | |
|
பருமித்த களிறு போல | |
|
நூற்கதி கொண்டு கண்ணா | |
|
னுகத்தள வெல்லை நோக்கி | |
|
மேற்கதிக் கேணி யாய | |
|
விழுத்தவர் மனையில் வந்தாற் | |
|
காற்கொசி கொம்பு போலக் | |
|
கைதொழு திறைஞ்சி மாதோ. | |
|
(இ - ள்.) பால்கதிர் திங்கள் கொட்பின் - பாலனைய கதிரையுடைய திங்கள் (எல்லா மீன்களையும் அளித்தற்குச்) சுழலும் சுழற்சிபோலே; பருமித்த களிறுபோல - (எல்லாரையும் அளித்தற்குப்) பலதார் அணிந்த களிறு அடங்கி மெத்தென நடக்குமாறுபோல; நூல் கதி கொண்டு - ஆகமத்திற் கூறிய வழியை உட்கொண்டு; மேல்கதிக்கு ஏணி ஆய விழுத்தவர் - வீட்டு நெறிக்கு ஏணியாகிய சிறந்த தவத்தினர்; கண்ணால் நுகத்தளவு எல்லை நோக்கி - கண்ணால் நுகத்தளவாகிய எல்லையை நோக்கி; மனையில் வந்தால் - மனையிடத்து வந்தால்; காற்கு ஒசி கொம்பு போலக் கைதொழுது இறைஞ்சி - காற்றுக்கு நுடங்கும் மலர்க் கொம்புபோல (நிலமிசை விழுந்து) கையினால் தொழுது வணங்கி,
|
(வி - ம்.) கொட்பு - சுழற்சி. பருமித்த - அணிசெய்யப்பட்ட. நூல் - ஆகமம். நுகம் - நுகத்தடி. விழுத்தவர் - சிறந்த துறவிகள். ஏணிதவத்திற்குவமை. காற்கு - காலுக்கு; கால் - காற்று.
|
( 228 ) |
2827 |
தொடிக்கையாற் றொழுது வாழ்த்தித் | |
|
தூமணி நிலத்து ளேற்றிப் | |
|
பொடிப்புனை துகிலி னீக்கிப் | |
|
புகழ்ந்தடி கழீஇய பின்றை | |
|
யடுத்தசாந் தகிலி னாவி | |
|
யாய்மல ரருச்சித் தானார் | |
|
கொடுப்பர்நா லமிர்த மூன்றிற் | |
|
குணம்புரிந் தடங்கி னார்க்கே.. | |
|
(இ - ள்.) தொடிக் கையால் தொழுது வாழ்த்தி - (எழுந்து) வளையணிந்த கையால் மறுமுறையும் வணங்கிப் போற்றி; தூமணி நிலத்துள் ஏற்றி - தூய மணி நிலத்தே இருத்தி; அடிபொடிப் புனை துகிலின் நீக்கி - அவரடியின் துகளைத் துணியால் துடைத்து; புகழ்ந்து கழீஇய பின்றை - புகழுமாறு கழுவிய பிறகு; அடுத்த சாந்து அகிலின் ஆவி ஆய்மலர் அருச்சித்து - பொருந்தின
|