| பதிகம் | 
16  | 
  | 
| 
 ஆறும் - அச்சம் பரந்த வளைந்த வில்லின் தழும்பைக் கண்டு எதிர்கொண்டபடியும்; 
 | 
  | 
| 
    (வி - ம்.) 'கண்ணிணையும்' என்னும் உம்மை (செய்யுள்) விகாரத்தால் தொக்கது. 1ஓடின பொன் 2கிடக்க நெகிழுமாதலின் 'ஊரும்' என்றார். (கேமசரியின்) கண்ணும் (தான் செல்லும்) காடும் மழை பொழியப் போனான் என்றதனாற் காலம் கார் ஆயிற்று. 'மன் நீர வெள்வேல்' எனவும் பாடம். சிலை: (கருவி) ஆகுபெயர், (சிலைத் தழும்பை உணர்த்தியது). 
 | 
( 16 ) | 
|  22 | 
திண்டே ரரசர் திறற்சிங்கங்கள் வில்லும் வாளுங் |  
|   | 
கண்டாங் குவந்து கடிபெய்திவட் காத்துமென்று |  
|   | 
கொண்டார் குடங்கை யளவேயுள கண்ணி னாளைப் |  
|   | 
புண்டாங் கெரிவே லிளையோற்குப் புணர்த்த வாறும், | 
 
 
 | 
| 
    (இ - ள்.) திண்தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும் கண்டு ஆங்கு உவந்து - (தடமித்தன்) வலிய தேரையுடைய அரசர்களாகிய யானைகட்குச் சிங்கங்கள் போன்ற தன் மக்களின் விற்பயிற்சியையும் வாட்பயிற்சியையும் (சீவகன் கற்பித்து அரங்கேற்றியபோது ) பார்த்து அப்பொழுதே மகிழ்ந்து; இவண் கடிபெய்து காத்தும் என்று -இவ்விடத்தே சீவகனைக் காவலிட்டுக் காப்போம் என்று ; கொண்டார் குடங்கை அளவேயுள கண்ணினாளை -இரப்போரின் குவிந்த கை அளவே உள்ள கண்ணையுடைய கனகமாலையை; புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த ஆறும் - (பகைவருடைய) புண்ணைச் சுமந்த ஒளி வீசும் வேலேந்திய சீவகனுக்கு மணம்புரிவித்தபடியும்; 
 | 
  | 
| 
    (வி - ம்.) கொண்டார்-ஏற்றார் (இரப்பவர்.). பகைவர் புண்ணைத் தாங்குதற்குக் காரணமான வேல். (தாங்கு வேல்) : வினைத்தொகை. ஏதுப் பொருள் கருவிக்கண் அடங்கும் ; 'மற்றிந்நோய் தீரும் மருந்து' (கலித்தொகை: 60) என்றாற்போல. 'அரசன் திறலும் ' என்றும் பாடம். 
 | 
  | 
| 
    அரசர் திறற் சிங்கங்கள் : ஏகதேச உருவக அணி. சீவகன் தட மித்தன் புதல்வர் ஐவருக்கும் வில்லும் வாளும் கற்பித்தான். குடங்கை அளவு கண் : பெரிய கண்கள் என்பதைக் குறிக்கின்றன. 
 | 
( 17 ) | 
|  23 | 
மதியங் கெடுத்த வயமீனெனத் தம்பி மாழாந் |  
|   | 
துதிதற் குரியாள் பணியாலுடனாய வாறு, |  
|   | 
நிதியின் னெறியி னவன்றோழர் நிரந்த வாறும், |  
|   | 
பதியின் னகன்று பயந்தாளைப் பணிந்த வாறும், | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தம்பி மதியம் கெடுத்த வயமீன் என மாழாந்து - சீவகன் தம்பியான திங்களைப் பிரிந்த உரோகிணி 
 | 
  | 
  | 
| 
 1. ஓடின - உருக்கிய. 2.கிடக்க - காலின்மேற் கிடக்கும்போது 
 | 
  |