பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 160 

உவம-5.) தொல்காப்பியனார் சொல்லும் பொருளும் உடன் ஆராய்தலின் உருவகவுவமை யென்றே கூறினார். செங்கோலையுடைய கதிர்; இல்பொருளுவமம்.

 

   ஏஎ: குறிப்புமொழி. இதனால், அவன் ஆண்டகைமை குறைந்ததற்கு இரங்கினார்.

( 261 )
291 பாலருவித் திங்கடோய் முத்தமா லைப்பழிப்பில்
  நெடுங்குடைக்கீழ்ப் பாய்பரி மான்றோ்க்
கோலருவி வெஞ்சிலையான் கூர்வா ளோடுமணிக்
  கேடகமு மறமு மாற்றி
வாலருவி வாமனடித் தாமரை மலர்சூடி
   மந்திரமென் சாந்து பூசி
வேலருவிக் கண்ணினார்மெய் காப்போம்ப வேந்தன்போய்
   விண்ணோர்க்கு விருந்தாயி னானே.

   (இ - ள்.) பால்அருவித் திங்கள்தோய் முத்தம்மாலைப் பழிப்புஇல் நெடுங்குடைக்கீழ் - பால்போலுங் கதிர்களையுடைய திங்களைப்போல, முத்துமாலை அணிந்த குற்றமற்ற பெருங்குடையின் நீழலிலே; பாய்பரி மான்தேர் - தாவும் புரவிகள் பூட்டிய தேரில் அமர்ந்து; கோல்அருவி வெஞ்சிலையான் - அம்புகளை அருவிபோல வீசும் கொடிய சிலையினான் (இப்போது அவைகளின்றி) ; கூர்வாளொடு மணிக்கேடகமும் மறமும் ஆற்றி - கூரிய வாளும் கேடகமும் வீரமும் துணையாகப் பொருது; வால்அருவி மந்திரமென் சாந்துபூசி வாமன் அடித் தாமரை மலர்சூடி- அருகனை நினைப்பதாகிய சுக்கிலத் தியானத்திலே முழுகி அருகமந்திரமாகிய சாந்தைப் பூசி அவன் அடிகளாகிய தாமரை மலர்களை அணிந்து; வேல்அருவிக் கண்ணினார் மெய்காப்பு ஓம்ப - வேலனைய கண்ணினையுடைய அரம்பையர் மெய்யைச் சூழ்ந்து காவல் செய்ய; போய் விண்ணோர்க்கு விருந்தாயினான் வேந்தன் - சென்று வானவர் வழிபடுதற்குப் புதியனாயினான் அரசன்.

 

   (வி - ம்.) தோய் : உவமையுருபு. வேலருவி - வேலொழுங்கு.

 

   உயிர் நீங்குகின்றபொழுது தியானம் வந்துதவுதலின், வீடு பெற்றான் என்க ; சுவர்க்கமுமாம்.

 

   இடையறாமையானும் மூழ்கினார்க்கு உலகியற்றுன்பம் மறைந்து குளிர்ந்திருத்தலானும் சுக்கிலத்தியானத்தை ”வாலருவி” என்றார். வாலருவியின்கண் ஆடி என்க. ஓதுங்கால் உள்ளமும் உடலும் குளிர்தலின் வாமன் மந்திரத்தை மென்சாந்தம் என்றார்.

( 262 )