பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1600 

   (இ - ள்.) அலறுவது கூற்று நா அனைய - கூப்பிடுவதாகிய கூற்றுவனின் நாவைப் போன்ற; கூர்இலை - கூரிய இலை போன்ற வடிவமுடைய; துளும்பும் நீர் ஏற்ற வாள் - (குடங்களில்) அசையும் நீரை (அரசர் சொரிய) ஏற்றுக் கொண்ட வாளை ஏந்திய; இறைவ! - அரசனே!; ஈங்கு இனி - இங்கு, இனிமேல்; பொருஇல் புண்ணியர்க்கு - ஒப்பற்ற நல்லோர்க்கு; ஆற்றிய கொடைப்பயன் அறியக் கூறுவாம் - செய்த கொடையின் பயனை நீயறியக் கூறுவேம்; போற்றினை கேள் - அதனைக் கருத்துடன் கேட்பாயாக.

   (வி - ம்.) அலறுவதாவது : தன் கொடுமை கூறிப் பலரையுங் கூப்பிடுதல்.

   அலறுவதாகிய கூற்றுநா என்க. இது வேலினது இலைக்கு வினையும் வடிவமும் பற்றி வந்தவுவமை.

( 231 )
2830 கடிப்புவா ரங்குலி கொளீஇய கைதுரந்
தடுத்துவார் மயிர்த்துதி யலற வூதலிற்
பொடித்தபொற் றாமரை யனைய பொங்கழ
லிடைக்கிடந் தெவ்வள விரும்பு காய்ந்ததே.

   (இ - ள்.) கடிப்பு வார் அங்குலி கொளீஇய கை - விளிம்பிற் பிணித்த கடிப்பிற் சேர்த்த வாரை விரல் கோத்துக்கொண்ட கையாலே; அடுத்துத் துரந்து வார் மயிர்த்துதி அலற ஊதலின் - நெருக்கிச் செலுத்தி நீண்ட மயிரையுடைய தோலாலாகிய துருத்தியை ஓசை உண்டாக ஊதுவதால்; பொடித்த பொன்தாமரை அனைய பொங்கு அழலிடைக் கிடந்து - துகளாக்கிய பொற்றாமரை போன்ற பொங்கும் அழலிலே கிடத்தலால்; இரும்பு எவ்வளவு காய்ந்தது - இரும்பு எவ்வளவு காய்ந்ததாகும்?

   (வி - ம்.) கடிப்பு - துருத்தியின் உறுப்பினுளொன்று. அங்குலி - விரல். கொளீஇய - கோத்துக்கொண்ட. மயிர்த்துதி - மயிரையுடைய தோலாலாகிய துருத்தி. பொன்றாமரை - அழலுக்குவமை. தாமரை மலர்க்கு ஆகுபெயர்.

( 232 )
2831 காய்ந்தவவ் வளவினாற் கௌவு நீரதொத்
தாய்ந்தறி கொடையின தளவிற் புண்ணியந்
தோய்ந்துயி ருடம்பிவ ணொழியத் தொக்கநாள்
வீந்துபோய் வயிற்றகம் விதியி னெய்துமே.

   (இ - ள்.) காய்ந்த அவ்வளவினால் கௌவும் நீரது ஒத்து - இரும்பு காய்ந்த அம்மிகுதிக்கேற்றவாறு உண்ணும் நீர்போல; ஆய்ந்து அறி கொடையினது அளவில் - ஆராய்ந்து தெளியும்