முத்தி இலம்பகம் |
1601 |
|
|
கொடையின் அளவுக்கேற்றவாறு; புண்ணியம் உயிர் தோய்ந்து - புண்ணியத்தை உயிர் பெற்று; தொக்க நாள்வீந்து - தொகுத்த நாள் கழிந்தபின்; உடம்பு இவண் ஒழியப்போய் - உடம்பை இங்கே ஒழித்துப் போய்; வயிற்றகம் விதியின் எய்தும் - (போக பூமியிலே) ஒரு வயிற்றிலே முறைப்படி அடையும்.
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர். 'உயிரென்றது மேல், இரும்பு போல வாம் பிணியுயிர்' (சீவக. 3111) என்பதனால் ஈண்டு நரகத்திற் சேறற்குரிய இருப்புயிரைக் கூறிற்றாம்' எனக் கொண்டு,
|
”இவ் விருப்புயிர். பல பிறப்பினும் தீவினையென்னும் தீயினுட்கிடந்து காய்ந்தே தீவினைப்பயனாகிய நீரை யுண்ணுதலைக் கெடுத்து, ஈண்டுச் செய்த நற்றானத்தினது அளவாலே உண்டான புண்ணிய நீரை உண்டுபோய்ப் போகபூமியிலே ஒரு வயிற்றகத்தே எய்தும்,”
|
என்று தம் வழக்கப்படி சொற்களை மாற்றியமைத்துப் பொருள் கூறுவர்.
|
( 233 ) |
2832 |
திங்கணா ளொன்பதும் வயிற்றிற் சோ்ந்தபின் | |
|
வங்கவான் றுகில்பொதி மணிசெய் பாவைபோ | |
|
லங்கவ ரிரட்டைக ளாகித் தோன்றலுஞ் | |
|
சிங்கினா ரிருமுது குரவ ரென்பவே. | |
|
|
(இ - ள்.) வயிற்றில் ஒன்பது திங்கள் நாளும் சேர்ந்தபின் - (சேர்ந்த) வயிற்றிலே ஒன்பது திங்களுக்குரிய நாட்களெல்லாம் சேர்ந்திருந்த பிறகு; வங்கவான் துகில் பொதிமணி செய்பாவை போல் - மரக்கலத்திலிருந்து வந்த சிறந்த ஆடையாற் பொதியப் பெற்ற மணிப்பாவை அவ்வாடையினின்றும் புறப்பட்டாற்போல; அங்கு அவர் இரட்டைகள் ஆகித் தோன்றலும் - அவ்விடத்தில் (அவ்வுயிரையுடைய) அவர்கள் இரட்டைப் பிள்ளைகளாய்ப் பிறந்த அளவிலே; இதுமுது குரவர் சிங்கினார். இருமுது குரவராக அவர்களைத் தொடர்பு கொண்டவர்கள்,
|
(வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.
|
ஒன்பது திங்கள் நாளும் என மாறுக. வங்கவான் துகில் - மரக்கலத்தின் வாயிலாய் வந்த சிறந்த ஆடை என்பதாம் . இது கருவினைப் பொதிந்துள்ள ஓர் உறுப்பிற்குவமை. மணிசெய்பாவை - மகவிற்குவமை.
|
இரட்டை - இரட்டைப் பிள்ளைகள். சிங்கினார் : சிக்கினார் என்பதன் விகாரம்.
|
( 234 ) |
2833 |
இற்றவர் தேவராய்ப் பிறப்ப வீண்டுடல் | |
|
பற்றிய விசும்பிடைப் பரவு மாமுகி | |
|
றெற்றென வீந்தெனச் சிதைந்து போகுமான் | |
|
மற்றவம் மக்கடம் வண்ணஞ் செப்புவாம். | |
|
|