பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1602 

   (இ - ள்.) இற்று அவர் தேவராய்ப் பிறப்ப - இவ்வுடம்பு நீங்க, அவர்கள் வானவர்களாய்ப் பிறப்ப; ஈண்டு உடல் பற்றிய விசும்பிடைப் பரவும் மாமுகில் தெற்றென வீந்தென - ஈண்டிய உடல் வானிடைப் பரவும் பெரிய முகில் தெளிவாக மாயந்தாற் போல; சிதைந்து போகும் - அழிந்து போகும்; மற்ற அம்மக்கள் தம் வண்ணம் செப்புவாம் - இனி அம் மக்களின் வண்ணம் கூறுவாம்.

   (வி - ம்.) இச்செய்யுளும் உரையும் வேறு பிரதிகளில் கீழ்வருமாறு வேறுபட்டுள்ளன.

”இற்றவர் தேவராய்ப் பிறப்ப வீண்டுடம்
பற்றமில் பறவைக ளடையக் கொண்டுபோய்ச்
சுற்றிய பாற்கடற் றுளும்ப விட்டிடும்
பொற்றிரள் வரையொடு மின்னுப் போலவே.”

   (இ - ள்.) சிக்கெனக் கொண்டு நின்றவர்கள் தம்முடம்பை நீத்துப் போய்த் தேவர்களாய்ப் பிறப்ப, வரையோடு கூடிய மின்னுப்போல ஈண்டிய வுடம்பைச் சில பறவைகள் எடுத்துக் கொண்டுபோய்ப் பாற்கடலிலே போகடு மென்றானென்க. இச்செய்யுளின் பாடபேதம் பலவென்ப.

( 235 )
2834 பிறந்தவக் குழவிகள் பிறர்கள் யாவரும்
புறந்தர லின்றியே வளர்ந்து செல்லுநா
ளறைந்தன ரொன்றிலா வைம்ப தாயிடை
நிறைந்தனர் கலைகுண முறுப்பு நீரவே.

   (இ - ள்.) பிறந்த அக் குழவிகள் - பிறந்த அப் பிள்ளைகள்; பிறர்கள் யாவரும் புறந்தரல் இன்றியே .- புறத்துள்ளார் ஒருவரும் போற்றுதல் இன்றியே; வளர்ந்து செல்லும் நாள் - வளர்ந்து போகும் நாட்கள்; ஒன்றிலா ஐம்பது ஆயிடை - நாற்பத்தொன்பது நாட்களிலே; உறுப்பு கலை குணம் நீர நிறைந்தனர் அறைந்தனர் - உறுப்புக்களும் கலையும் குணமும் நீர்மையுடையவாய் நிறைந்தனர் என்றும் ஆகமத்திலே கூறினர்.

   (வி - ம்.) குழவியென்னும் விரவுப் பெயரின் பின்வந்த கள்ளீறு ஈண்டு உயர்திணையை உணர்த்துதல், 'கடிசொல் இல்லை' (தொல். எச்ச. 56) என்பதனாற் கொள்க.

( 236 )

வேறு

2835 சோலைமீ னரும்பித் திங்கட்
  சுடரொடு பூத்த தேபோன்
மாலையுங் கலனு மீன்று
  வடகமுந் துகிலு நான்று