பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1603 

2835 காலையு மிரவு மில்லாக்
  கற்பக மரத்தி னீழற்
பாலையாழ் மழலை வேறாய்ப்
  பன்மணிக் கொம்பி னின்றாள்.

   (இ - ள்.) பாலையாழ் மழலை - பாலையாழ் போலும் மழலைச் சொல்லால்; சோலைமீனை அரும்பித் திங்கள் சுடரொடு பூத்ததே போல் - ஒரு சோலை விண்மீனை அரும்புவித்துத் திங்களை ஞாயிற்றுடன் பூத்ததைப் போல; மாலையும் கலனும் ஈன்று - மாலையும் அணிகலனையும் ஈன்று; வடகமும் துகிலும் நான்று - அத்தவாளம் என்னும் மேற் போர்வையும் ஆடையும் தொங்கி; காலையும் இரவும் இல்லாக் கற்பக மரத்தின் நீழல் - காலையும் இரவும் அறியாத கற்பக மரத்தின் நிழலிலே; வேறாய்ப் பன்மணிக் கொம்பின் நின்றாள் - தனியே பல மணிகள் கொண்ட கொம்பு போல நின்றனள்.

   (வி - ம்.) இரண்டு குழவிகளிலே ஒன்று ஆண்; மற்றொன்று பெண். பெண் இவ்வாறு நின்றாள்.

( 237 )
2836 இலங்குபொற் குவடு சாந்த
  மெழுதிய தனைய தோண்மே
னலங்கிளர் குழைக ணான்று
  சாந்தின்வாய் நக்கி மின்னக்
கலங்கலந் தகன்ற மார்பிற்
  கற்பக மாலை தாழ
விலங்கர சனைய காளை
  வேனில்வேந் தென்னச் சோ்ந்தான்

   (இ - ள்.) விலங்கு அரசு அனைய காளை - (ஆண் குழவியாகிய) சிங்கம் போன்ற அக் காளைப் பருவத்தினன்; இலங்கு பொன் குவடு சாந்தம் எழுதியது அனைய தோள்மேல் - விளங்கும் பொன்மலையின் மேற் சந்தனம் எழுதியது போன்ற தோளின் மேல்; நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின்வாய் நக்கி மின்ன - அழகு விளங்குங் குழைகள் தொங்கிச் சாந்தைத் தடவிக்கொண்டு மின்ன; கலம் கலந்து அகன்ற மார்பில் கற்பகமாலை தாழ - அணிகலன் பொருந்தி விரிந்த மார்பிலே கற்பகமாலை தொங்க; வேனில் வேந்து என்னச் சென்றான் - காமன்போலச் சென்றனன்.

   (வி - ம்.) சாந்தம் எழுதிய பொற்குவடு அனைய தோள் என்றவாறு. நலம் - அழகு. கலம் - அணிகலன். விலங்கரசு - அரிமா. வேனில் வேந்தன். காமன்.

( 238 )