முத்தி இலம்பகம் |
1604 |
|
|
2837 |
குண்டலங் குலவி மின்னப் | |
|
பொன்னரி மாலை தாழத் | |
|
தெண்கட லமிர்திற் செய்த | |
|
பாவையிற் பாவை நிற்ப | |
|
விண்டலர் மாலை மார்பன் | |
|
விதியினாற் சென்று மாதோ | |
|
கண்டனன் கலந்த வுள்ளங் | |
|
காதலி னொருவ ரானார். | |
|
(இ - ள்.) குண்டலம் குலவி மின்னப் பொன் அரிமாலை தாழ - குண்டலம் விளங்கி மின்னவும் பொன்னரிமாலை தொங்கவும்; தெண்கடல் அமிர்தின் செய்த பாவையின் பாவை நிற்ப - தெளிந்த கடலமிர்தினாலே செய்த பாவைபோல அப் பாவையாள் நிற்ப; விண்டு அலர்மாலை மார்பன் விதியினால் சென்று கண்டனன் - விரிந்து மலர்ந்த மாலையையுடைய மார்பன் ஊழாலே சென்று பார்த்தான்; உள்ளம் கலந்த - மனமிரண்டும் ஒன்றாய்க் கூடின; காதலின் ஒருவர் ஆனார் - அன்பினால் ஒரு மனத்தரானார்.
|
(வி - ம்.) ”உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்” என்பது குறள் (1106.)
|
( 239 ) |
2838 |
கொதிநுனைக் காம னம்பு | |
|
கொப்புளித் துமிழ்ந்து காம | |
|
மதுநிறை பெய்து விம்மு | |
|
மணிக்குட மிரண்டு போல | |
|
நுதிமுக முத்தஞ் சூடி | |
|
நோக்குந ராவி வாட்ட | |
|
விதிமுலை வெய்ய வாகித் | |
|
தாரொடு மிடைந்த வன்றே. | |
|
(இ - ள்.) கொதி நுனைக் காமன் அம்பு காமம் கொப்புளித்து உமிழ்ந்து - கொதிக்கும் முனையையுடை காமன் அம்பு காமத்தைக் கொப்புளித்து உமிழ; மது நிறை பெய்து விம்மும் மணிக்குடம் இரண்டு போல - மது நிறையப் பெய்யப்பட்டு விம்முகின்ற இரண்டு மணிக்குடம் போல; நோக்குநர் ஆவிவாட்ட நுதிமுகம் முத்தம் சூடி - பார்ப்போர் உயிரை வாட்ட முனையுறும் முகத்தே முத்தை அணிந்து; முலை வெய்ய ஆகி - முலைகள் விருப்பூட்டுவனவாக; விதி தாரொடு மிடைந்த - ஊழினால் தாரொடு கலந்தன.
|