முத்தி இலம்பகம் |
1605 |
|
|
(வி - ம்.) கொதிநுனை : வினைத்தொகை. உமிழ்ந்து - உமிழ. ”காமத்தைக் கொப்புளித்துக் கொதி நுனையையுடைய அம்பைக் காமன் சொரிய” என்பர் நச்சினார்க்கினியர். பெய்து - பெய்யப்பட்டு. வாட்ட - வாட்டுதற்கு. விதியினாலே முலை தாரொடு மிடைந்த என்க.
|
( 240 ) |
2839 |
இமைத்தநுங் கண்க ளென்னை | |
|
யிகழ்ந்தனி ரென்று சீற | |
|
வமைத்துநின் னழகு கோல | |
|
மாரவுண் டறுக்க லாற்றா | |
|
திமைத்தன வஞ்சி யென்ன | |
|
விளையவள் சிலம்பிற் குஞ்சி | |
|
நமைத்தபூந் தாமந் தோய | |
|
நகைமுக விருந்து பெற்றான். | |
|
(இ - ள்.) நும் கண்கள் இமைத்த - உம் விழிகள் இமைத்தன; எம்மை இகழ்ந்தனிர் - (ஆகையால்) நீர் எம்மைப் பழித்தீர்; என்று சீற - என்று அவள் சினந்துரைக்க ; வஞ்சி - வஞ்சிக்கொடி போல்வாளே!; நின் அழகுகோலம் ஆர வுண்டு அமைத்து - நின் அழகையும் ஒப்பனையையும் நிறையப் பருகி அமைத்துக்கொண்டு; அறுக்கல் ஆற்றாது இமைத்தன என்ன - நீக்கமாட்டாமல் இமைத்தனகாண் என்று (இளையவன்) கூறி; இளையவள் சிலம்பில் குஞ்சி நமைத்த பூந்தாமம் தோய - அவள் சிலம்பிலே தன் குஞ்சியிற் சூட்டிய மலர்மாலை படும்படி வணங்கலாலே; நகைமுக விருந்து பெற்றான் - அவளது நகைமுகமாகிய விருந்தைப் பெற்றான்.
|
(வி - ம்.) 'அமைத்து' என்பதற்குப் 'பொறுத்து' என்ற பொருள் கூறி, 'தாமந் தோய அமைத்து' என்றும். 'வஞ்சி' என்பதனை 'அஞ்சி' எனப் பிரித்துச் 'சீற' என்பதற்குப் பின், 'அவன் அஞ்சி, என்றும் கொண்டு கூட்டுவர் நச்சினார்க்கினியர், 'என்று கூற' எனவும் பாடம்.
|
( 241 ) |
2840 |
இன்னகி லாவி விம்மு | |
|
மெழுநிலை மாடஞ் சோ்ந்தும் | |
|
பொன்மலர்க் காவு புக்கும் | |
|
புரிமணி வீணை யோர்த்து | |
|
நன்மலர் நான வாவி | |
|
நீரணி நயந்துஞ் செல்வத் | |
|
தொன்னலம் பருகிக் காமத் | |
|
தொங்கலாற் பிணிக்கப் பட்டார். | |
|