| முத்தி இலம்பகம் | 
1609  | 
 | 
  | 
| 
    (இ - ள்.) இது உள் பொருள் என உணர்தல் ஞானம் ஆம் - (பொருள்களுள்) இது உண்மைப் பொருள் என உணர்தல் ஞானம் எனப்படும்; அப்பொருள் தௌ்ளிதின் தெளிதல் காட்சி ஆம் - அப் பொருளின் தன்மை இது எனத் தெளிந்திடுதல் காட்சி யெனப்படும்; இருமையும் விள் அற விளங்க - அந்த இரண்டினையும் நீக்கம் அற விளங்கும்படி; தன் உளே ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்ப - தன் மனத்திலே சிறப்புற நிலை பெறுத்தலை ஒழுக்கம் என்று அறிஞர் கூறுவர். 
 | 
| 
    (வி - ம்.) ஐ, என்ப : இரண்டினையும் அசை என்பர் நச்சினார்க்கினியர். 
 | 
| 
    இச்செய்யுட் கருத்தோடு, 
 | 
| ”எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் | 
 | 
| மெய்ப்பொருள் காண்ப தறிவு” (423) | 
 | 
| ”பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் | 
 | 
| மருளானாம் மாணாப் பிறப்பு” (351) | 
 | 
| எனவரும் திருக்குறள்கள் நினைக்கற்பாலன. | 
 | 
| 
    ஞானம் காட்சி ஒழுக்கம் எனுமிவற்றை இரத்தினத்திரயம், மும்மணிகள் என்ப. 
 | 
( 247 ) | 
|  2846 | 
கூடிய மும்மையுஞ் சுடர்ந்த கொந்தழ |   |  
|   | 
னீடிய வினைமர நிரைத்துச் சுட்டிட |   |  
|   | 
வீடெனப் படும்வினை விடுதல் பெற்ற தங் |   |  
|   | 
காடெழிற் றோளினா யநந்த நான்மையே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆடு எழில் தோளினாய் - வெற்றியும் அழகுமுடைய தோளுடையாய்!; கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்து அழல் - இவ்வாறு கூடிய மூன்று தன்மையும் நின்று எரிந்த மிகு நெருப்பு; நீடிய வினைமரம் நிரைத்துச் சுட்டிட - மிக வளர்ந்த இருவினையாகிய மரத்தினை ஒழுங்குறச் சுட்டுப்போட; வினைவிடுதல் வீடு எனப்படும் - அவ்விருவினையும் (தாம் நெடுங்காலம் பழகிய உயிர்க்கிழவனைக்) கைவிடுதல் வீடு எனப்படும்; அங்குப் பெற்றது அநந்த நான்மை - அங்குப் பெற்ற பயன் அநந்த சதுட்டயங்கள். 
 | 
| 
    (வி - ம்.) அவை : அநந்த ஞானம், அநந்த தரிசனம், அநந்த வீரியம், அநந்த சுகம். (கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம்.) 
 | 
( 248 ) | 
|  2847 | 
கடையிலா வறிவொடு காட்சி வீரியங் |   |  
|   | 
கிடையிலா வின்பமுங் கிளந்த வல்லவு |   |  
|   | 
முடையதங் குணங்களோ டோங்கி விண்டொழ |   |  
|   | 
வடைதலான் மேலுல கறியப் பட்டதே. |   |  
|   | 
 
 
 |