பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 161 

292 செந்நீக் கருந்துளைய தீங்கு ழல்யாழ்
  தேந்தே மென்னுமணி முழவமுந்
தந்தாங் கிளையார் மெல்விரல்க டீண்டத்
  தாந்தாமென் றிரங்குந்தண் ணுமைகளு
மந்தீங் கிளவியா ரைஞ்ஞூற்றுவ ரவைதுறை
   போயாட லரம்பை யன்னா
ரெந்தாய் வெறுநிலத்துச் சோ்தியோ வென்றினைந்
  திரங்கிப் பள்ளிபடுத் தார்களே..

   (இ - ள்.) செந்தீக் கருந்துளைய தீங்குழல் யாழ் - செந்தீயாற் கருந்துளையவான இனிய குழலும் யாழும்; தேம்தேம் என்னும் மணிமுழவமும் - தேம்தேம் என்றொலிக்கும் முழவங்களும்; தாம்தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும் - தாம்தாம் என்று முழங்கும் தண்ணுமைகளும்; தந்துஆங்கு இளையார் மெல்விரல்கள் தீண்ட - ஆங்கே கொண்டுவந்து இசைக்கும் நாடகத்திற்கும் வாச்சியத்திற்குமுரிய மகளிர் மெல்விரல்களால் தீண்டி வாசிக்க; அம்தீங் கிளவியார் ஐந்நூற்றுவர் - அழகிய இனிய மொழியார் ஐந்நுற்றுவராகிய அகப்பரிவார மகளிரும்; அவை துறைபோய ஆடல்அரம்பை அன்னார் - தமக்குரிய துறையிலே முற்றுங் கற்று அவையினில் ஆடுதல்புரியும் அரம்பையரைப் போன்ற நாடக மகளிரும்; ஏந்தாய்! வெறுநிலத்துச் சேர்தியோ! என்று இனைந்து இரங்கிப் பள்ளி படுத்தார்கள் - 'எந்தையோ!' வெறுநிலத்துக் கிடத்தியோ ! என்று துன்புற்று அழுது ஈமத்திலே படுக்கை யமைத்துக் கிடத்தினர்.

 

   (வி - ம்.) தேந்தேம், தாந்தாம்: அநுகரணம். 'கிளவியார் ஐந்நூற்றுவர்' என்றார் அகப்பரிவாரம் ஐந்நூற்றுவரே என்றற்கு. மேலும் நால்வரை ஒழிந்த தோழர் ஐந்நூற்றுவரும் அகப்பரிவாரம் என்று உணர்க.

 

   'கோன்றமர் நிகளம் மூழ்கி' (சீவக. 262) எனவே ஆடவர் இன்மை உணர்க.

( 263 )
293 மடையவிழ்ந்த வெள்ளிலை வேலம்பு பாயமணிச்
  செப்பகங் கடைகின்ற: வேபோற்
றொடையவிழ்ந்த மாலையுமுத் துந்தோய்ந்த துணைமுலையி
  னுள்ளரங்கி மூழ்கக் காமன்
படையவிழ்ந்த கண்பனி நீர்பாய விம்மாப்
  பருமுத்தநா மழலைக்கிண் கிணியினார்
புடையவிழ்ந்த கூந்தல்புல வுத்தோயப் பொழிமழையுண்
  மின்னுப்போற் புலம்பி யார்த்தார்