| முத்தி இலம்பகம் |
1613 |
|
|
|
புகையும் கொடியும் - பொதிந்த அகிற் புகையும் துகிற் கொடியும் (கொண்டு); நிதியின் கிழவன் இனிது ஆ உறையும் - நிதிக்குரிய குபேரன் இனிமையாக வாழ்கின்ற; பதி பொன் நகரின் படி கொண்டது - அப் பதி பொன் நகரின் தன்மையைக் கொண்டதாகும்.
|
|
(வி - ம்.) செல்வம் மிக்கதாற் குபேரன் பதிபோன்றது . குபேரன் பதி - அளகாபுரி. பொன் நகர் : இந்திரனுடையது.
|
( 256 ) |
| 2855 |
ஏம மாகிய துப்புர வெய்திய | |
| |
பூமி மாதில கம்மெனும் பொன்கிளர் | |
| |
நாம நன்னகர் வீதிக டாமெலாங் | |
| |
காம வல்லி கிடந்தன போன்றவே. | |
| |
|
|
(இ - ள்.) ஏமம் ஆகிய துப்புரவு எய்திய - ஆதரவாகிய நுகர் பொருள்களைத் தன்னிடத்தே கொண்ட; பூமி மாதிலகம் எனும் நாம நல்நகர் - பூமி மாதிலகம் என்கிற பெயரையுடைய அழகிய நகரிலே; பொன்கிளர் வீதிகள்தாம் எலாம் - பொன் ஒளிரும் தெருக்கள் யாவும்; காமவல்லி கிடந்தன போன்ற - காமவல்லிகள் கிடந்த அமராவதியின் தெருக்களைப் போன்றன.
|
|
(வி - ம்.) ஏமம் - இன்பமுமாம். துப்புரவு - நுகர்பொருள். பூமிமாதிலகம் எனும் நகரில் பொன்கிளர் வீதிகள் என இயைக்க. தாம் : அசை. காமவல்லி கிடந்தன என்னுந்தொடர் அமராவதியிற் றெருக்கள் என்பதுபட நின்றது.
|
( 257 ) |
| 2856 |
பைங்கழன் மன்னர் மன்னன் | |
| |
பவணமா தேவ னென்பான் | |
| |
சங்கினுண் முத்த மொப்பாள் | |
| |
சயமதி பயந்த நம்பி | |
| |
யைங்கணைக் காம னன்னா | |
| |
னசோதர னரச சீயந் | |
| |
தங்கிய கேள்வி யாற்குத் | |
| |
தையலார்ச் சோ்த்தி னாரே. | |
|
|
(இ - ள்.) பைங்கழல் மன்னர் மன்னன் பவணமா தேவன் என்பான் - (அந் நகரில் உறையும்) பைங்கழல் அணிந்த வேந்தர் வேந்தன் பவணமா தேவன் என்பானும்; சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி - சங்கில் உள்ள முத்தைப் போன்றவளாகிய சயமதி என்பாளும் பெற்ற நம்பி; ஐங்கணைக் காமன் அன்னான் அசோதரன் அரச சீயம் - ஐங்கணை ஏந்திய காமனைப் போன்றவனாகிய அசோதரன் அரசராகிய யானைகட்குச் சிங்கம
|