பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1614 

போன்றவன்; தங்கிய கேள்வியாற்குத் தையலார்ச் சேர்த்தினார் - நூல்களில் தங்கிய கேள்வியையுடைய அவனுக்குத் தக்க மாதர்களை மணம் புரிவித்தனர்.

   (வி - ம்.) அரச சீயம் : ஏக தேச உருவகம். அசோதரன் வீரமும் அழகும் கேள்வியும் உடையவன் என்றார்.

( 258 )
2857 இளமுலை பொருது தேந்தா
  ரெழில்குழைந் தழிய வைகிக்
கிளைநரம் பிசையுங் கூத்துங்
  கிளர்ந்தவை கனற்ற நாளும்
வளைமயங் குருவ மென்றோள்
  வாய்நலம் பருகி மைந்தன்
விளைமதுத் தேறன் மாந்தி
  வெற்றிப்போ ரநங்க னானான்.

   (இ - ள்.) இளமுலை பொருது தேன் தார் எழில் குறைந்து அழிய வைகி - (அவன் அம் மங்கையரின்) இளமுலைகள் தாங்குதலால் தன் மார்பிலுள்ள தேன் பிலிற்றும் மலர் மாலைகள் அழகு குறைந்து வாட அவர்களுடன் கூடி; கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற - (சோர்வுற்றபோது) கிளையென்னும் நரம்பையுடைய யாழிசையும் கூத்தும் எனத் தோற்றியவை (சோர்ந்த காமத்தை) அழலுறச் செய்ய; நாளும் - எப்போதும்; வளை மயங்கு உருவம் மென்தோள் வாய்நலம் பருகி - மூங்கில் மயங்கும் அழகிய மெல்லிய தோளை(த் தழுவி) வாயிலுள்ள தேறலைப் பருகி; விளைமதுத் தேறல் மாந்தி - முற்றியகள்ளின் தெளிவையும் பருகி; மைந்தன் வெற்றிப் போர் அநங்கன் ஆனான் - (அம்) மைந்தன் (அம் மகளிர்க்கு) வெற்றிப் போரையுடைய காமன் ஆயினான்.

   (வி - ம்.) பொருது - பொர. கிளை எழுவகைப் பண்ணில் ஒன்று இசையுங் கூத்துமாகிய கிளர்ந்தவை என்க. கிளர்ந்தவை - தோற்றியவை. மதுத்தேறல் - கட்டெளிவு. அநங்கன் - காமன்.

( 259 )
2858 இலங்கரி பரந்த வாட்க
  ணிளையவர் புலவி நீங்கச்
சிலம்பெனும் வண்டு பாடச்
  சீறடிப் போது புல்லி
யலங்கல்வாய்ச் சென்னி சோ்த்தி
  யரிமதர் மழைக்கண் பில்க
நலங்கவர்ந் துண்டு நண்ணார்
  நாமுறக் கழிக்கு மாதோ.