| முத்தி இலம்பகம் | 
1616  | 
 | 
  | 
|  2860 | 
றோய்ந்ததன் காதலன் பற்ற |   |  
|   | 
  வற்றுச்சொரிகின்ற மேகலைபோல் வீழ்ந்தவாளை |   |  
|   | 
பாய்ந்து துகைப்பக் கிழிந்தகூழைப் |   |  
|   | 
  பனித்தா மரைசூழ் பகற்கோயிலே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வேய்ந்த வெண்தாமரைக் கோதை போல - கட்டிய வெள்ளைத் தாமரை மலர் மாலைபோல; விசும்பில் பறக்கின்ற வெள்ளை அன்னம் - வானிலே பறக்கின்ற வெள்ளை அன்னம்; ஆய்ந்த முகில் ஆடைத்திங்கள் கண்ணி ஆகாயம் என்னும் அரிவை - சுருங்கிய முகிலாகிய ஆடையினையும் திங்களாகிய கண்ணியினையும் உடைய ஆகாயம் என்னும் அரிவையின்; மேகலை - மேகலையை; சாயல் தோய்ந்த தன் காதலன் பற்ற அற்றுச் சொரிகின்றபோல் - அவள் மென்மையை நுகர்ந்த அவள் காதலன் பற்ற அற்றுச் சொரிகின்ற முத்துக்கள் போல; வாளை பாய்ந்து துகைப்பக் கிழிந்த கூழைப் பனித்தாமரைசூழ் பகல் கோயில் வீழ்ந்த - வாளை பாய்ந்து உழக்குதலாலே கிழிந்த கூழையிலையையுடைய குளிர்ந்த தாமரை சூழ்ந்த நீராவி மண்டபத்திலே வீழந்தன. 
 | 
| 
    (வி - ம்.) பகற்கோயில் என்றார் பகற்போதில் இருத்தல் பற்றி. முத்தமேகலை எனக் கொள்க. 
 | 
( 262 ) | 
வேறு
 | 
|  2861 | 
விரும்புபொற் றட்டிடை வெள்ளிக் கிண்ணமார்ந் |   |  
|   | 
திருந்தன போன்றிள வன்னப் பார்ப்பினம் |   |  
|   | 
பொருந்துபொற் றாமரை யொடுங்கிப் புக்கொளித் |   |  
|   | 
திருந்தகண் டானிளங் கோக்க ணம்பியே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) விரும்பு பொன் தட்டிடை - விருப்பூட்டும் பொன் தட்டிலே; வெள்ளிக் கிண்ணம் ஆர்ந்து இருந்ன போன்று - வெள்ளிக் கிண்ணம் நிறைந்து இருந்தன போல; இள அன்னப் பார்ப்பினம் - இளமை பொருந்திய அன்னப் பார்ப்புத்திரள்; பொருந்து பொன் தாமரை ஒடுங்கி - (பறக்கலாற்றாமல்) பொருத்தமான அழகிய தாமரை மலர்களிலே ஒடுங்கி; புக்கு ஒளித்து இருந்த - புகுந்து ஒளித்து இருந்தவற்றை; இளங்கோக்கள் நம்பி கண்டான் - இளவரசர்கட்கெல்லாம் தலைவனாகிய அவன் கண்டான். 
 | 
| 
    (வி - ம்.) பொருந்து - ஒளித்தற்குப் பொருந்தின. நம்பி : தலைவன்; இளமைப் பெயரன்று. அன்னப்பார்ப்பு தன் உறையுள் கண்டு மகிழ்ந்து சென்றமை கருதல்வேண்டும். 
 | 
( 263 ) |