பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1617 

2862 உரிமையுட் பட்டிருந் தொளிக்கின் றார்களைப்
பெருமநீ கொணர்கெனப் பேசு காஞ்சுகி
யொருமகற் கீந்தனன் கோயில் புக்கன
னெரிமுயங் கிலங்குவேற் காளை யென்பவே.

   (இ - ள்.) உரிமையுள் பட்டிருந்து - (அவ் வன்னப் பார்ப்புக்களை) அவன் மனைவியரும் உடனிருந்து கண்டு; பெரும! நீ ஒளிக்கின்றார்களைக் கொணர்க என - தலைவனே! நீ மறைந்திருக்கும் அப் பார்ப்புக்களைக் கொண்டு தருக என்று கேட்க; பேசு காஞ்சுகி ஒரு மகற்கு ஈந்தனன் - கூறுதற்குரிய காஞ்சுகி ஒருவனுக்கு அதனைக் கூறிப் பார்ப்பைப் பற்றி (அவர்கட்குக்) கொடுத்தனனாகி; எரி முயங்கு இலங்கு வேல்காளை கோயில் புக்கனன் - எரி தழுவி விளங்கும் வேலேந்திய காளை அரண்மனையை அடைந்தான்.

   (வி - ம்.) உட்பட்டு - அக் காட்சிக்கு உட்பட்டு. 'பெருமைநீர்' எனப் பாடம் ஓதுவாருமுளர். பல பார்ப்பைப் பிடித்தான் என்றாற் பலமுறை சிறைப்படுதல் வேண்டுமாதலின் அவற்றுள் ஒன்றென்றே பொருள் கூற வேண்டும்' என்பர் நச்சினார்க்கினியர்.

( 264 )
2863 வடமலைப் பொன்னனார் மகிழ்ந்து தாமரைத்
தடமுறை வீர்க்கிவை தடங்க ளல்லவே
வடமுலை யெனநடாய் வருடிப் பாலமு
துடனுறீஇ யோம்பினார் தேம்பெய் கோதையார்.

   (இ - ள்.) வடமலைப் பொன் அனார் மகிழ்ந்து - இமயத்தில் (பதுமை யென்னும் பொய்கையில் தோன்றிய) திருமகளைப் போன்ற அம் மங்கையர் களிப்புற்று; தாமரைத் தடம் உறைவீர்க்கு வடமுலை இவை தடங்கள் அல்லவே? (அப் பார்ப்பைப் பார்த்து) தாமரைத் தடத்தே வாழும் நுமக்கு வடமணிந்த இம் முலைத்தடங்கள் தடங்கள் அல்லவோ? ; என நடாய் வருடி - என்று நன்மொழிகளை நவின்று வருடிக் கொடுத்து; பால் அமுது உடன் உறீஇ - பாலாகிய அமுதை உடனிருந்து ஊட்டி; தேன் பெய் கோதையார் ஓம்பினார் - தேன் பொழியுங் கோதையார் அவற்றைப் பாதுகாத்தனர்.

   (வி - ம்.) 'உறைவீர்' எனவும் 'இவை தடங்கள் அல்லவே?' எனவும் பன்மை வந்ததனால் முற்செய்யுளில் ஒரு பார்ப்பெனக் கூற வேண்டும் என்பது ஆராய்தற்குரியதாகிறது. நச்சினார்க்கினியர் இதனை 'ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி' என்பர். இப் பார்ப்புக்கள் கட்டவோ, கூட்டிலடைக்கவோ கூடிய பருவத்தன அல்லவென்பது தோன்ற, 'முலையில் அணைத்து' என்றார். அஃது, 'இளவன்னப் பார்ப்பினம்' என்பதனானும் (சீவக. 2861) உணர்க, ”இதனுள் இப் பார்ப்பைக