| முத்தி இலம்பகம் | 
1619  | 
 | 
  | 
| 
 விரைந்து அரசன் கழலணிந்த திருவடியைத் தன் கையால் தொழுதவாறே சென்றான். 
 | 
| 
    (வி - ம்.) படுகண் : வினைத்தொகை. ஏங்க - ஒலிக்க. இடுகுதல் - நுண்ணிதாதல். நுசுப்பி - இடை. நம்பி - ஈண்டு அசோதரன். அடிகட்கு : முன்னிலைப் புறமொழி. இற்று - இத்தன்மைத்து. வல்லே - விரைந்து. 
 | 
( 267 ) | 
|  2866 | 
அணிசே ரிடக்கை விரலால் வலத்தோண் |   |  
|   | 
மணிசோ் வளைவாய் வதின்வைத் துவலத் |   |  
|   | 
தணிமோ திரஞ்சூழ் விரல்வாய் புதையாப் |   |  
|   | 
பணியா முடியாற் பணிந்தா னிலையோன். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இளையோன் - அவ்விளவரசன்; அணிசேர் இடக்கைவிரலால் வலத்தோள் மணிசேர் வளை வாய்வதின் வைத்து - அழகிய இடக்கை விரலால் வலத்தோளிலுள்ள மணிகள் இழைத்த வளையை நன்றாகத் திருத்தி; வலத்து அணி மோதிரம் சூழ் விரல் வாய் புதையாப் பணியா - வலக்கையின் அழகிய மோதிரம் அணிந்த விரலாலே வாயைப் பொத்தி வணங்கி; முடியால் பணிந்தான் - பிறகு முடிசாய்த்து வணங்கி நின்றான். 
 | 
| 
    (வி - ம்.) பணியா - பணிந்து : செய்யா என் எச்சம். 
 | 
| 
    தோள்வளை, மணிசேர்வளை என இயைக்க. வாய்வதின் - வாய்ப்புடையதாக; பொருந்துமாறு என்றவாறு. வலம் : ஆகுபெயர்; வலக்கை. புதையா - புதைத்து : செய்யா என் வாய்பாட்டெச்சம். 
 | 
( 268 ) | 
வேறு
 | 
|  2867 | 
கிளைப்பிரி வருஞ்சிறை யிரண்டுங் கேட்டியேல் |   |  
|   | 
விளைக்கிய வித்தனா யிருமற் றீங்கெனத் |   |  
|   | 
திளைக்குமா மணிக்குழை சுடரச் செப்பினான் |   |  
|   | 
வளைக்கையார் கவரிகொண் டெறிய மன்னனே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வளைக்கையார் கவரிகொண்டு எறிய மன்னன் - வளைக்கை மகளிர் கவரியால் வீச வீற்றிருந்த மன்னன்; கிளைப்பிரிவு அருஞ்சிறை இரண்டும் கேட்டியேல் - (அன்னப் பார்ப்பு) உறவினிடமிருந்து பிரிந்ததும் அரிய சிறையிற் பட்டதும் ஆகிய இரண்டின் பயனையுங் கேட்டாய் எனில்; விளைக்கிய வித்து அனாய் ஈங்கு இரு என - (அவ்விரண்டின் பயனையும் மேல்) விளைத்தற்கு வித்துப்போன்றவனே! இங்கே இரு என்று; திளைக்கும் மா மணிக்குழை சுடரச் செப்பினான் - தோளிற் பயிலும் பெரிய மணிக்குழை ஒளிரக் கூறினான். 
 |