நாமகள் இலம்பகம் |
162 |
|
(இ - ள்.) பருமுத்தம் நாமழலைக் கிண்கிணியினார் - பெரிய முத்துக்களாகிய நாவினாலே மழலை மொழியும் கிண்கிணி யணிந்த மகளிர்; மணிச் செப்பு அகம் கடைகின்றவே போல் - மாணிக்கச் செப்பின் உள்வாயைக் கடைகின்றவை அதனுள் அழுந்து மாறுபோல; மடைஅவிழ்ந்த வெள்ளிலைவேல் அம்புபாய - மூட்டுக் கழன்ற வெண்மையான இலைமுகமுடைய வேலும் அம்பும் என அங்கே பரவிக் கிடப்பவை; தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணைமுலையின் உள் அரங்கி மூழ்க - முறுக் கவிழ்நத மாலையும் முத்தும் பயின்ற துணைமுலைகளின் உள்ளே தைத்து அழுந்தும்படி; காமன்படை அவிழ்ந்த கண்பனிநீர் பாய விம்மா- காமன் படைகளை வென்ற கண்களிலிருந்து நீர் பெருக விம்மிப் புரண்டழுது, (பிறகு); புடைஅவிழ்ந்த கூந்தல் புலவுதோய - பக்கத்தே அவிழ்ந்து நிலத்திலே படிந்து மெய்யை மறைத்துத் தொங்குங் கூந்தலிற் குருதி படிய; பொழிமழையுள் மின்னுப்போல் புலம்பினார் - நீர்பொழியும் முகிலினூடே மின்னுப்போல இருந்து அழுதனர்.
|
|
(வி - ம்.) புலவு - குருதி; பண்பாகுபெயர். [(புலால் கமழ்வது குருதி) இனிக் குருதிபடிந்த நிலத்திற்கெனின் தானியாகுபெயர்.]
|
|
[விம்மா : செய்யா என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம்.] விம்மிப் புலம்பினார் என்க.
|
( 264 ) |
294 |
அரிமானோர் மெல்லணைமேன் மஞ்ஞைசூழக் கிடந்தாங்கு |
|
வேந்தன் கிடந்தா னைத்தான் |
|
கரிமாலை நெஞ்சினான்கண் டான்கண்டே கைதொழுதான் |
|
கண்ணீர் கலுழ்ந்து குத்தபின் |
|
னெரிமாலை யீமத்திழு தார்குடமே னைநூறு |
|
மேற்பச் சொரிந்த லறியெம் |
|
பெருமானே யெம்மை யொளித்தியோ வென்னாப் |
|
பெரியகண் ணீர்சொரிந் தலறுவார். |
|
(இ - ள்.) அரிமான் ஓர்மேல் அணைமேல் மஞ்ஞைசூழக் கிடந்தாங்கு வேந்தன் கிடந்தானை - சிங்கவேறு ஒரு மெல்லிய பள்ளியின்மேல் மயில்கள்சூழக் கிடந்தாற்போலக் கிடந்த வேந்தனை; கரிமாலை நெஞ்சினான்தான் கண்டான் - இருண்ட இயல்புடைய உள்ளத்தினனாங் கட்டியங்காரன் பார்த்தான்; கண்டே கைதொழுதான் - பார்த்தவுடனே கைகூப்பி வணங்கினான்; கலுழ்ந்து கண்ணீர் உகுத்தபின் - (பிறகு) அழுது கண்ணீர் சிந்தினான்; அதற்குப்பின், எரிமாலை ஈமத்து இழுது ஆர்குடம் ஏனைநூறும் ஏற்பச் சொரிந்து அலறி - எரியும் இயல்புடைய ஈம விறகிலே குடங்கள் நிறைந்த நெய்யும் சந்தனம்
|
|