பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1622 

படுவர் - தாங்கற்கரிய துன்பத்தினிடையிலே அழுந்துவர்; இன்னா நடுக்குடைய காமம் விடுத்திடுதல் நன்று - (ஆதலால்) துன்பமாகிய நடுங்குதலையுடைய காமத்தினைக் கைவிடுதல் நல்லது.

   (வி - ம்.) ”காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையும்

ஆணின்மை செய்யுங்கால் அச்சமா - நீணிரயத்
துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தாற் கூறு” (நாலடி - 84)

   என்பவாகலின், ”மாற்றார் பிடர்த்தலை ஒள்வாள்போற் பிறர்மனை” என்றும், எடுப்பரிய துன்பத்திடைப்படுவர் என்றும் ஓதினார்.

( 273 )
2872 தெருளிற்பொருள் வானுலக
  மேறுதற்குச் செம்பொ
னிருளில்படு கால்புகழ்வித்
  தில்லையெனி னெல்லா
வருளுநக வையநக
  வைம்பொறியு நையப்
பொருளுநக வீட்டும்பொருள்
  யாதும்பொரு ளன்றே.

   (இ - ள்.) தெருளின் - தெளிவாக ஆராய்ந்தால்; பொருள் - (நன்னெறியில் ஈட்டும்) பொருளானது; வான் உலகம் ஏறுதற்குச் செம்பொன் இருள் இல் படுகால் - வானுலகிற்கு ஏறிச் செல்லச் செம்பொன்னலான மயக்கமற்ற ஏணியாம்; புகழ்வித்து - புகழுக்கு வித்து; இல்லையெனின் - (நன்னெறியில் ஈட்டுதல்) இல்லையானால்; எல்லா அருளும் நக - எல்லா அருளும் இகழ; வையம் நக - உலகம் இகழ; ஐம்பொறியும் நைய - ஐம்பொறிகளும் வருந்த; பொருளும் நக - (ஈட்டிய) பொருளும் இகழ; ஈட்டும் பொருள் யாதும் பொருள் அன்று - சேர்த்துவைக்கும் பொருள் சிறிதும் பொருளாகாது.

   (வி - ம்.) அருள்கள் பலவாதலின், 'எல்லா அருளும்' என்றார். வையம் - வையத்துள்ளார் (ஆகுபெயர்). ஐம்பொறியும் பொருள்களை நுகரப் பெறாமையால் 'நைய' என்றார். ஈட்டிய பொருளும் எம்மை நுகர்கின்றிலன் என்று நகும். 'செம்பொன் வானுலகம்' எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

( 274 )
2873 பொய்யொடு மிடைந்தபொரு ளாசையுரு ளாய
மைபடும்வி னைத்துகள் வழக்குநெறி மாயஞ்
செய்தபொருள் பெய்தகலன் செம்மைசுடு செந்தீக்
கைதவ நுனித்தகவ றாடலொழி கென்றான்.