| முத்தி இலம்பகம் |
1623 |
|
|
|
(இ - ள்.) பொய்யொடு மிடைந்த பொருள் ஆசை உருள் ஆயம் - பொய்யொடு நெருங்கிய பொருளாசையால் உருள்கிற பரத்தையர் கூட்டம்; மாயம் செய்த பொருள் பெய்த கலன் - மாயத்தைச் செய்த இன்பம் நிறையப் பெய்ததொரு கொள்கலம்; மைபடும் வினைத்துகள் வழக்கு நெறி - ஆதலின், பாவமுண்டாகும் தீவினையாகிய துகளைப் புகுத்துதற்கு வழியாய் இருக்கும்; (அதனை ஆடுதலையும்) செம்மை சுடு செந்தீக் கைதவம் நுனித்த கவறு ஆடல் ஒழிக என்றான் - நடுநிலையைச் சுடுகின்ற சிவந்த நெருப்பாகிய வஞ்சனை மிக்க கவறாடுதலையும் ஒழிக என்று கூறினான்.
|
|
(வி - ம்.) உருள் ஆயம் - தம்மை நுகர்வார் மனங்கட் கேற்பப் புரளும் ஆயம். வழக்கு : 'வளிவழக்கறுத்த வங்கம்' (368 : புறநா.) என்றாற்போலக் கொள்க. பொருளென்றது ஈண்டு இன்பத்தினைக் குறிக்கும்.
|
( 275 ) |
| 2874 |
காமமுடை யார்கறுவொ டார்வமுடை யாருந் | |
| |
தாமமொடு சாந்துபுனை வார்பசியி னுண்பா | |
| |
ரேமமுடை யார்களிவ ரல்லரிவை யில்லா | |
| |
வாமனடி யல்லபிற வந்தியன்மி னென்றான். | |
| |
|
|
(இ - ள்.) காமமுடையார் - காமத்தையுடையாரும்; கறுவொடு ஆர்வம் உடையாரும் - செற்றத்துடன் ஆசையையுடையாரும்; தாமமொடு சாந்து புனைவார் - மாலையையும் சாந்தையும் புனைவாரும்; பசியின் உண்பார் - பசியாலே இல்லிற்சென்று உணவேற்பாருமாகிய; இவர் ஏமம் உடையார்கள் அல்லர் - இவர்கள் நமக்கு ஆதரவு செய்தவர்களல்லர்; இவை இல்லாவாமன் அடி அல்ல பிற - இத்தீப் பண்புகள் இல்லாதவாமன் அடி அல்லாத பிற அடிகளை; வந்தியன்மின் என்றான் - வணங்கன்மின் என்றான்.
|
|
(வி - ம்.) கறுவு - செற்றம். ஆர்வம் - ஆசை. ஏமம் - காவல். இவை என்றது காமமும் செற்றமும் ஆர்வமும் ஆகிய இத் தீங்குணங்கள் என்றவாறு. வந்தித்தல் - வணங்குதல்.
|
( 276 ) |
| 2875 |
பூவைகிளி தோகைபுண ரன்னமொடு பன்மா | |
| |
யாவையவை தங்கிளையி னீங்கியழ வாங்கிக் | |
| |
காவல்செய்து வைத்தவர்க டங்கிளையி னீங்கிப் | |
| |
போவர்புகழ் நம்பியிது பொற்பிலது கண்டாய். | |
| |
|
|
(இ - ள்.) புணர் அன்னமொடு - தன் கிளையுடன் கூடிய அன்னத்தோடு; பூவை கிளி தோகை - பூவையும் கிளியும் தோகையும்; பல்மா - பல விலங்குகளும்; யாவை - பிறவும் ;
|