| முத்தி இலம்பகம் |
1629 |
|
|
| 2883 |
யறைகடல் வேலி காத்துன் | |
| |
னலங்கல்வேற் றாய மெல்லாம் | |
| |
பெறுதகு புதல்வற் கீந்து | |
| |
பின்னைநீ துறத்தி யென்றான். | |
| |
|
|
(இ - ள்.) சிறுவன் வாய்மொழியைக் கேட்டு - யசோதரன் வாய்மொழியைக் கேட்டு; தேர் மன்னனும் சொன்னான் - அரசனும் கூறினான்; (எங்ஙனம் சொன்னான் எனின்) உறுகளிற்று உழவ - மிகுதியான களிறுகளையுடைய உழவனே!; உன் ஒளி முடித்தாயம் எய்தி - உன் ஒளிமுடியாகிய தாயத்தை அடைந்து; அறை கடல் வேலி காத்து - ஒலிக்குங் கடலை வேலியாகக் கொண்ட உலகைக் காத்து; உன் அலங்கல் வேல் தாயம் எல்லாம் - உன்னுடைய மாலையணிந்த வேலாற் கொண்ட தாயத்தையெல்லாம்; பெறு தகு புதல்வற்கு ஈந்து - பெறத்தக்க மகனுக்களித்து; பின்னை நீ துறத்தி என்றான் - பிறகு, நீ துறப்பாயாக என்று கூறினான்.
|
|
மன்னன் - பவணமாதேவன். மன்னன் சொன்னான் எங்ஙனம் சொன்னான் எனின் உழவ! எய்தி, காத்து, ஈந்து, பின்னைத் துறத்தி என்றான் என்க.
|
( 285 ) |
| 2884 |
கொலைச்சிறை யுய்ந்து போகு | |
| |
மொருவனைக் குறுக வோடி | |
| |
யலைத்தனர் கொண்டு பற்றி | |
| |
யருஞ்சிறை யழுத்து கின்றார் | |
| |
தொலைப்பருஞ் சுற்றத் தாரோ | |
| |
பகைவரோ வடிக ளென்ன | |
| |
விலைப்பெரு மணியை முந்நீர் | |
| |
நடுக்கடல் வீழ்த்த தொத்தான். | |
|
|
(இ - ள்.) அடிகள் - அடிகளே!; கொலைச்சிறை உய்ந்து போகும் ஒருவனைக் குறுக ஓடி - கொலைத்துன்பமுடைய சிறையினின்றும் தப்பிப்போகும் ஒருவனைத் தொடர்ந்து சென்று; பற்றிக்கொண்டு; அலைத்தனர் அருஞ்சிறை அழுத்துகின்றார் - வருத்தினராய்த் திரும்பவும் அந்த அரிய சிறையிலே அழுத்துகின்றவர்; தொலைப்ப அருஞ்சுற்றத்தாரோ? பகைவரோ? என்ன - நீங்கற்கரிய உறவினரோ? பகைவரோ என்று கூற; பெருவிலை மணியை முந்நீர் நடுக்கடல் வீழ்த்தது ஒத்தான் - அதுகண்ட பவணமாதேவன் மிகு விலைபெற்ற மணியை முந்நீர்மையுடைய கடல் நடுவே வீழ்த்ததைப் போன்றான்.
|