நாமகள் இலம்பகம் |
163 |
|
முதலியவற்றையும் தகவுறப் பெய்து அலறி; எம்பெருமானே! எம்மை ஒளித்தியோ என்னாப் பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார் - எம் இறைவனே எம்மை மறந்து மறைந்தனையோ என்று பெருங் கண்களிலிருந்து நீரைப் பொழிந்து அலறுவாராயினர்.
|
|
(வி - ம்.) கட்டியங்காரன் மனம் வழிபாட்டிற்படுதலின் தன்வயத்ததின்றிக் கலங்கியது என்பார், 'கலுழ்ந்து' என்றார். கண்ணீர் உகுத்தது இன்பத்தினால். இதனை, 'உவகைக் கலுழ்ச்சி' என்பர். 'விளிவில் கொள்கை' (தொல். மெய்ப்-5) என்றதனால் இதுவும் அழுகைப்பாற்படும். அரசன் மெய்யை எரி விழுங்குவதனால், 'ஒளித்தியோ' என்றனர். என்னா - என்று.
|
|
இச் செய்யுளும் பின்வரும் இரண்டு செய்யுட்களும் ஒரு தொடர்.
|
( 265 ) |
295 |
கையார் வளைகள்புடைத் திரங்குவார் கதிர்முலைமே |
|
லாரம் பரிந்த லறுவார் |
|
நெய்யார் கருங்குழல்மேன் மாலைசிந்தி நிலத்திடுவார் |
|
நின்று திருவில் வீசு |
|
மையார் கடிப்பிணையும் வார்குழையுங் களைந்திடுவார் |
|
கையால் வயிற துக்குவா |
|
ரையாவோ வென்றழுவார் வேந்தன்செய் கொடுமைகொடி |
|
தென்பார் கோல்வ ளையினார்.. |
|
(இ - ள்.) கோல் வளையினார் - திரண்ட வளையலையணிந்த அம் மகளிர்; கைஆர் வளைகள் புடைத்து இரங்குவார் - கையிலுள்ள வளையல்களை உடைத்துக்கொண்டு அலறுவார்; முலைமேல் கதிர் ஆரம் பரிந்து அலறுவார் - முலைமேலுள்ள ஒளிவிடும் முத்து மாலைகளை அறுத்து அலறுவார்; நெய்ஆர் கருங்குழல்மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார் - நெய்ப்பையுடைய கரிய குழல்மேல் உள்ள மாலையைச் சிதறி நிலத்திலே வீசுவார்; திருவில் நின்று வீசும் வார்குழையும் மைஆர் கடிப்பிணையும் களைந்திடுவார் - இந்திரவில்லின் ஒளியை நிலையாக வீசும் நீண்ட குழையையும் நீலநிறம் பொருந்திய கடிப்பிணையையும் கழற்றிப் போடுவார்; கையால் வயிறு அதுக்குவார் - கைகளால் வயிற்றில் அடித்துக் கொள்வார்; ஐயா! ஓ ! என்று அழுவார் - ஐயா! ஓ! என்று அழுவார் ; வேந்தன் செய்த கொடுமை கொடிது என்பார் - அரசன் செய்த கொடுமை அறவுங் கொடியது என்பார்.
|
|
(வி - ம்.) கடிப்பினை : குதம்பைபோன்ற ஒரு காதணி. ஓ: இரக்கக் குறிப்பு. கொடிதென்றனர் - அரசற்குச் செய்யும் நீர்க்கடன் முறை செய்யாமை யெண்ணி.
|
( 266 ) |